/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அரசுமருத்துவக் கல்லூரி காலியிட பிரச்னை வாக்குவாதத்தால் 3 மணி நேரம் கவுன்சிலிங் தடைஅரசுமருத்துவக் கல்லூரி காலியிட பிரச்னை வாக்குவாதத்தால் 3 மணி நேரம் கவுன்சிலிங் தடை
அரசுமருத்துவக் கல்லூரி காலியிட பிரச்னை வாக்குவாதத்தால் 3 மணி நேரம் கவுன்சிலிங் தடை
அரசுமருத்துவக் கல்லூரி காலியிட பிரச்னை வாக்குவாதத்தால் 3 மணி நேரம் கவுன்சிலிங் தடை
அரசுமருத்துவக் கல்லூரி காலியிட பிரச்னை வாக்குவாதத்தால் 3 மணி நேரம் கவுன்சிலிங் தடை
ADDED : செப் 27, 2011 11:50 PM
புதுச்சேரி : அரசு மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள, வெளிநாடுவாழ் இந்தியருக்கான ஒரு இடத்தை நிரப்புவது தொடர்பாக, சென்டாக் அதிகாரிகளுக்கும், பெற்றோர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், கவுன்சிலிங் 3 மணி நேரம் தடைபட்டது.மருத்துவப் படிப்புக்கான இறுதிகட்ட கவுன்சிலிங் நேற்று துவங்கியது.
காலை 9 மணிக்கு, பிற மாநில மாணவர்களுக்கும், மீனவர், பழங்குடி, முஸ்லிம், காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்திய மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடந்தது. மதியம் 12 மணிக்கு புதுச்சேரி மாணவர்களுக்கான கவுன்சிலிங் துவங்கியது. இதில், சென்டாக் தர வரிசையில் 199.666 முதல் 156 வரை கட் ஆப் பெற்ற மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.முன்னதாக, அரசு மருத்துவக் கல்லூரியில் 22 இடங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், ஒரு இடம் நிரம்பவில்லை. அதற்கும் சேர்த்து கவுன்சிலிங் நடத்த வேண் டும் என, மாணவர்களும், பெற்றோர்களும் வலியுறுத்தினர்.மேலும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இடம் நிரம்பாவிட்டால், புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் என கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து, அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும் என சென்டாக் அதிகாரிகள் கூறினர். அதிகாரிகளின் பதிலில் அதிருப்தியடைந்த மாணவர்கள், கவுன்சிலிங்கை புறக்கணித்தனர். இதைத் தொடர்ந்து சென்டாக் கன்வீனர் ஜெயக்குமார், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில், புதுச்சேரி மாணவர் பெற்றோர் நலச்சங்கத் தலைவர் பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரசு மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள வெளிநாடுவாழ் இந்தியருக்கான ஒரு இடத்தை, புதுச்சேரி மாண வர்களைக் கொண்டு நிரப்ப சென்டாக் அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து, கவுன்சிலிங் தொடர்ந்து நடந்தது.திடீரென ஏற்பட்ட இப் பிரச்னையால், நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கவுன்சிலிங் தடைபட்டது