ADDED : ஆக 17, 2011 12:29 AM
மேட்டூர் : ஜூன் இறுதியில் பருவமழை தீவிரம் காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி, ஹேரங்கி அணைகள் நிரம்பின.
ஹேமாவதி அணை நிரம்பும்நிலையில் உள்ளது. கே.ஆர்.எஸ்., அணை நேற்று முழு கொள்ளவை எட்டியது. இந்நிலையில், நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் குறைந்ததால், அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. அதனால், இரு அணைகளில் இருந்தும் நேற்று, மேட்டூருக்கு வினாடிக்கு, 9,600 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டது. நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்புப்படி, நடப்பாண்டில், நேற்று வரை கர்நாடகாவில் இருந்து, மேட்டூர் அணைக்கு, 82 டி.எம்.சி., தண்ணீர் வழங்கி இருக்க வேண்டும்; ஆனால், 48 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே வழங்கியுள்ளது.