/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பைக் மீது மினிடோர் ஆட்டோ மோதி ஒருவர் பலி: மூவர் காயம்பைக் மீது மினிடோர் ஆட்டோ மோதி ஒருவர் பலி: மூவர் காயம்
பைக் மீது மினிடோர் ஆட்டோ மோதி ஒருவர் பலி: மூவர் காயம்
பைக் மீது மினிடோர் ஆட்டோ மோதி ஒருவர் பலி: மூவர் காயம்
பைக் மீது மினிடோர் ஆட்டோ மோதி ஒருவர் பலி: மூவர் காயம்
ADDED : செப் 14, 2011 01:15 AM
ப.வேலூர்: நாமக்கல் அருகே பைக் மீது மினிடோர் ஆட்டோ மோதிய விபத்தில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயமடைந்த மூவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நாமக்கல் அருகே செருக்கலையை சேர்ந்தவர் ரங்கசாமி (40). நேற்று முன்தினம் மாலை, வேலகவுண்டம்பட்டியில் இருந்து செருக்கலைக்கு, உறவினர் பொந்தன் (35) என்பவருடன் டி.வி.எஸ்., ஸ்டார் சிட்டி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.ரங்கசாமியின் அண்ணன் குழந்தைகளான மணிகண்டன் (9), மஞ்சு (6) என இவருவரையும் பைக்கில் உடன் அழைத்துச் சென்றுள்ளார். மணியனூர் மாசாணியம்மன் கோவில் அருகே சென்ற போது, திருச்செங்கோட்டில் இருந்து வந்த மினிடோர் ஆட்டோ, பைக் மீது மோதியுள்ளது.அந்த விபத்தில், ரங்கசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயத்துடன் உயிர் தப்பிய பொந்தன், மணிகண்டன், மஞ்சு ஆகிய மூவரும் நாமக்கல் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக, நல்லூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.