/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/73 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் : டி.ஒய்.எப்.ஐ., பேரணியில் அதிர்ச்சி தகவல்73 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் : டி.ஒய்.எப்.ஐ., பேரணியில் அதிர்ச்சி தகவல்
73 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் : டி.ஒய்.எப்.ஐ., பேரணியில் அதிர்ச்சி தகவல்
73 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் : டி.ஒய்.எப்.ஐ., பேரணியில் அதிர்ச்சி தகவல்
73 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் : டி.ஒய்.எப்.ஐ., பேரணியில் அதிர்ச்சி தகவல்
ADDED : செப் 19, 2011 12:01 AM
களியக்காவிளை : ஊழல் மலிந்துவிட்டதால் நாடு சீரளிந்துவிட்டது.
73 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடத்துள்ளது என்று டி.ஒய்.எப்.ஐ., யின் அகில இந்தியக்குழு உறுப்பினர் சனல்குமார் பேசினார். ஊழலுக்கு எதிராக டி.ஒய்.எப்.ஐ., சார்பில் பைக் பேரணி களியக்காவிளையில் இருந்து கன்னியாகுமரி வரை நடந்தது. பைக் பேரணியின் துவக்க விழா களியக்காவிளை பி.பி.எம்., ஜங்ஷனில் நடந்தது. மாவட்ட தலைவர் புஷ்பதாஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சசிகுமார், பொருளாளர் எபிலைசியஸ் ஜோயல் முன்னிலை வகித்தனர். டி.ஒய்.எப்.ஐ., யின் அகில இந்தியக்குழு உறுப்பினர் சனல்குமார் பேசியதாவது. ஆட்சியாளர்களின் ஊழலால் நாடு சீரழிந்து விட்டது. நகர்வாலா ஊழல், போபர்ஸ் ஊழல், யூரியா உர ஊழல், பங்கு பத்திர ஊழல், சவப்பெட்டி ஊழல், காலணி வாங்கியதில் ஊழல், பொதுப்பணித்துறை பங்குகளை விற்றதில் ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல், கமன்வெல்த் ஊழல், ஐ.பி.எல்., கிரிக்கெட் ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் என அனைத்து வகைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. சுமார் 73 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது. ஊழல் செய்தவர்களை தண்டிக்க முடியாத வகையில் ஆட்சியாளர்கள் உள்ளனர். ஊழல்வாதிகளுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். நாடு ஊழலில் சீரழிந்து விட்டது. நாட்டின் வளர்ச்சி தடைபட்டுள்ளது. எனவே ஏழை, சாதாரண மக்கள் பாதிகப்பட்டுள்ளனர். ஊழலை எதிர்க்க டி.ஒய்.எப்.ஐ., அணி செயல்பட வேண்டும். இவ்வாறு சனல்குமார் பேசினார். தொடர்ந்து நடந்த பைக் பேரணி துவக்க விழாவிற்கு முன்னாள் எம்.பி., பெல்லார்மின் தலைமை வகித்தார். டி.ஒய்.எப்.ஐ., யின் அகில இந்தியக்குழு உறுப்பினர் சனல்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார். பைக் பேரணி களியக்காவிளை பி.பி.எம்., ஜங்ஷனில் இருந்து துவக்கி குழித்துறை, மார்த்தாண்டம், இரவிபுதூர்கடை, சுவாமியார்மடம், அழகியமண்டபம், தக்கலை, வில்லுக்குறி, பார்வதிபுரம், கிருஷ்ணன்கோவில், மீனாட்சிபுரம், சுசீந்திரம், கொட்டாரம் வழி கன்னியாகுமரி வந்தடைந்தது. பேரணியில் டி.ஒய்.எப்.ஐ., யை சார்ந்த ரெஜிஷ்குமார், ஆன்றோ கிளீட்டஸ், மாநிலக்குழு உறுப்பினர் ஷாலினி, கிறிஸ்டோபர், ஜோசப்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.