/உள்ளூர் செய்திகள்/சேலம்/முன்மாதிரி மாநகராட்சியாக மாற்றுவேன்அ.தி.மு.க., மேயர் வேட்பாளர் உறுதிமுன்மாதிரி மாநகராட்சியாக மாற்றுவேன்அ.தி.மு.க., மேயர் வேட்பாளர் உறுதி
முன்மாதிரி மாநகராட்சியாக மாற்றுவேன்அ.தி.மு.க., மேயர் வேட்பாளர் உறுதி
முன்மாதிரி மாநகராட்சியாக மாற்றுவேன்அ.தி.மு.க., மேயர் வேட்பாளர் உறுதி
முன்மாதிரி மாநகராட்சியாக மாற்றுவேன்அ.தி.மு.க., மேயர் வேட்பாளர் உறுதி
ADDED : அக் 07, 2011 01:42 AM
சேலம்: ''சேலம் மாநகராட்சியை, முன் மாதிரி மாநகராட்சியாக மாற்றிக்
காட்டுவேன்,'' என, அ.தி.மு.க., மேயர் வேட்பாளர் சவுண்டப்பன் பேசினார்.
சேலம் மாநகராட்சி மேயர் தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும்
சவுண்டப்பனை ஆதரித்து, அ.தி.மு.க., அமைப்பு செயலாளர் பொன்னையன், நெடுஞ்சாலை
துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி ஆகியோர், மாநகராட்சி, 34, 35, 36 ஆகிய
வார்டுகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.
ஓட்டுச்சேகரிப்பின் போது சவுண்டப்பன் பேசியதாவது:தேர்தலில் வெற்றி
பெற்றால், சேலம் மாநகராட்சியை முன்மாதிரி மாநகராட்சியாக மாற்றி காட்டுவேன்.
குடிநீர் பிரச்னையை, முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு சென்று,
கூட்டு குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்÷ன். இதன்
மூலம் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்ய
முடியும்.சுகாதாரமான மாநகராட்சியாக மாற்றி காட்டுவேன். மாநகராட்சி
நிர்வாகத்தை மேம்படுத்த, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
மாநகர
மக்களின் அடிப்படை பிரச்னைகள் குறித்து நன்கு தெரியும். அனைவரும் நலமுடன்
வாழ, அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பேன்.இவ்வாறு பேசினார்.பிரச்சாரத்தில்,
கவுன்சிலர் வேட்பாளர்கள் ஜெயப்பிரகாஷ், கோகிலவாணி, தாமரை செல்வம் மற்றும்
தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.,
வெங்கடாசலம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடாசலம், ரவிச்சந்திரன்,
பாலகிருஷ்ணன், மெடிக்கல் ராஜா, இளம்பாசறை மாவட்ட செயலாளர் சதீஸ்கமார்,
உரைமுரசு யூசுப், தேவராஜன், அழகேசன் உள்ளிட்ட பலர் சென்றனர்.


