Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/உரிமமின்றி கிளீனிக் நடத்திய ஒருவருக்கு ஐந்தாண்டு சிறை

உரிமமின்றி கிளீனிக் நடத்திய ஒருவருக்கு ஐந்தாண்டு சிறை

உரிமமின்றி கிளீனிக் நடத்திய ஒருவருக்கு ஐந்தாண்டு சிறை

உரிமமின்றி கிளீனிக் நடத்திய ஒருவருக்கு ஐந்தாண்டு சிறை

ADDED : ஆக 27, 2011 11:32 PM


Google News

ஜெயங்கொண்டம்: உரிமம் இன்றி மெடிக்கல் நடத்தியவருக்கு ஜெயங்கொண்டம் நீதிமன்றம் ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

ஜெயங்கொண்டம் அருகில் உள்ள திராவிட நல்லூர் பஞ்சாயத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி(35). இவர் அருகில் உள்ள இடையகுறிச்சி பஞ்சாயத்தில் உரிமம் இன்றி கிளினிக் வைத்து மருந்து ஊசி, மாத்திரைகள் விற்பனை செய்து வந்தார். கடந்த 2002 செப்டம்பர் 17ம் தேதி பெரம்பலூர் மருந்துகள் ஆய்வாளர் ரவிக்குமார், கிருஷ்ணசாமி கிளினிக்கில் ஆய்வு செய்தார். அப்போது உரிமம் இல்லாமல் கிளினிக் நடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து கிருஷ்ணசாமியின் மீது ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று முன்தினம் வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஜெகதீசன், அரசு அனுமதியின்றி மருந்து, மாத்திரை, ஊசி விற்பனை குற்றத்திற்கு மூன்றாண்டு சிறையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்தார். மருந்துகள் எங்கிருந்து வாங்கியவை? என்பதற்கு எந்தவித முகாந்திரமும் தெரிவிக்காமல் இருந்தமைக்காக இரண்டு ஆண்டு சிறையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us