"ஐ.நா., பாதுகாப்பு சபையை விரிவாக்க வலியுறுத்துவேன்'
"ஐ.நா., பாதுகாப்பு சபையை விரிவாக்க வலியுறுத்துவேன்'
"ஐ.நா., பாதுகாப்பு சபையை விரிவாக்க வலியுறுத்துவேன்'
ADDED : செப் 21, 2011 11:20 PM

புதுடில்லி: ''ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை விரிவாக்கப்பட்டு, உலகின் அதிக சக்தி வாய்ந்த அமைப்பாக அது உருவாக வேண்டும். பாதுகாப்பு சபையை விரிவாக்கம் செய்யும்படி வலியுறுத்துவேன்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில், வரும் 24ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றுகிறார். இதற்காக அவர் நேற்று நியூயார்க் புறப்பட்டுச் சென்றார். பிரதமருடன் வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், வெளியுறவு செயலர் ரஞ்ஜன் மத்தாய் ஆகியோரும் சென்றுள்ளனர். நியூயார்க்கில், ஈரான், ஜப்பான், நேபாளம், தெற்கு சூடான், இலங்கை ஆகிய நாடுகளின் தலைவர்களை, பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து பேசுகிறார்.
நியூயார்க் புறப்படும் முன்னர் பிரதமர் வெளியிட்ட அறிக்கை: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில், இந்தியா தற்போது தற்காலிக உறுப்பினராக உள்ளது. விரைவில் ஐ.நா., சபையில் சீர்திருத்தம் செய்யப்பட்டு, பாதுகாப்பு சபை விரிவாக்கப்பட வேண்டும். உலகின் சக்தி வாய்ந்த அமைப்பாக ஐ.நா., செயல்பட வேண்டும். ஐ.நா., பாதுகாப்பு சபையை விரிவாக்கம் செய்யும்படி வலியுறுத்தேன். ஐ.நா., பாதுகாப்பு சபையில், 19 ஆண்டுகளுக்கு பிறகு நிரந்தரமற்ற உறுப்பினராக இடம் பெற்றுள்ள இந்தியா, உலகின் அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்து குரல் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.