Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/"குண்டர் சட்டத்தில்' பொட்டு சுரேஷ் பாளை. சிறையில் திமுகவினர் ஆறுதல்

"குண்டர் சட்டத்தில்' பொட்டு சுரேஷ் பாளை. சிறையில் திமுகவினர் ஆறுதல்

"குண்டர் சட்டத்தில்' பொட்டு சுரேஷ் பாளை. சிறையில் திமுகவினர் ஆறுதல்

"குண்டர் சட்டத்தில்' பொட்டு சுரேஷ் பாளை. சிறையில் திமுகவினர் ஆறுதல்

ADDED : ஜூலை 26, 2011 01:41 AM


Google News

திருநெல்வேலி : குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பொட்டு சுரேஷ், திமுக நிர்வாகிகளை பாளை.

மத்திய சிறையில் திமுக பிரமுகர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர்.மதுரை மாவட்டம் திருமங்கலம் வேங்கடசமுத்திரத்தை சேர்ந்தவர் சிவனாண்டி. இவர் மனைவி பாப்பா. நூல் மில் அதிபர். இவருக்கு சொந்தமான நிலத்தை மோசடி செய்ததாக மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ், திருப்பரங்குன்றம் நகர செயலாளர் கிருஷ்ணப்பாண்டியன், திருமங்கலம் யூனியன் சேர்மன் கொடி சந்திரசேகர் கைது செய்யப்பட்டனர். கோர்ட் உத்தரவுப்படி இவர்கள் கடந்த 19ம்தேதி பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோர்ட்டில் மனு அளித்தனர்.



இதையடுத்து பாளை. மத்திய சிறையில் இருந்து நான்கு பேரும் மதுரை ஜே.எம்.1 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட பலத்த பாதுகாப்புடன் கடந்த 22ம்தேதி அழைத்துச்செல்லப்பட்டனர்.பின்னர் நான்கு பேரும் மீண்டும் பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையில், பொட்டு சுரேஷ் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் அவரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கான உத்தரவு நகல் நேற்று காலை பாளை. சிறையில் பொட்டு சுரேஷிடம் வழங்கப்பட்டது.திமுகவினர் சந்திப்புபொட்டு சுரேஷிற்கு ஆறுதல் கூற மத்திய அமைச்சர் அழகிரி பாளை. மத்திய சிறைக்கு வரவிருப்பதாக நேற்று தகவல் பரவியது. பத்திரிகை, டிவி நிருபர்கள் சிறை முன்பு திரண்டனர். நேற்று மாலை வரை அழகிரி வரவில்லை.ருப்பத்தூர் எம்.எல்.ஏ., பெரியகருப்பன், பாளை. மண்டல சேர்மன் சுப. சீதாராமன், வக்கீல் பொன்னம்பலநாதன், சீனியம்மாள் உள்ளிட்டோர் சிறையில் திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆறுதல் கூறினர். தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமியும் சிறையில் இருந்த திமுக நிர்வாகிகளை சந்தித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ரசாக் உள்ளிட்டோரும் சிறையில் திமுகவினரை சந்தித்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us