/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இலவச அரிசி, கோதுமை வழங்காவிட்டால் மஞ்சள் அட்டைகளை திருப்பி கொடுப்போம்இலவச அரிசி, கோதுமை வழங்காவிட்டால் மஞ்சள் அட்டைகளை திருப்பி கொடுப்போம்
இலவச அரிசி, கோதுமை வழங்காவிட்டால் மஞ்சள் அட்டைகளை திருப்பி கொடுப்போம்
இலவச அரிசி, கோதுமை வழங்காவிட்டால் மஞ்சள் அட்டைகளை திருப்பி கொடுப்போம்
இலவச அரிசி, கோதுமை வழங்காவிட்டால் மஞ்சள் அட்டைகளை திருப்பி கொடுப்போம்
ADDED : ஆக 24, 2011 12:05 AM
காரைக்கால் : காரைக்காலில் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு கிலோ 1 ரூபாய் வீதம் 5
கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டதற்கு நாஜிம்
எம்.எல்.ஏ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று
நிருபர்களிடம் கூறுகையில், காரைக்காலில் மஞ்சள் அட்டைக்கு கடந்த ஆட்சியில்
கிலோ 1 ரூபாய் வீதம் 5 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை வழங்கப்பட்டு வந்தது.
புதிய ஆட்சி பொறுப்பேற்றத்தில் இருந்து கடந்த 3 மாதங்களாக மஞ்சள்
அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை வழங்காதது கண்டிக்கத்தக்கது. அவர்களுக்கு
மாதம் 15 கிலோ அரிசி இலவசமாகவும், விலைக்கு, 5 கிலோ கோதுமை வழங்கப்படும் என
தெரிவித்தும் இன்று வரை வழங்கவில்லை. கடந்த 18ம் தேதி வெளியிட்ட
அரசாணையில் ரேஷன் கடையில் கோதுமை கிலோ 7 ரூபாய் 90 பைசாவாக
உயர்த்தியுள்ளனர். மஞ்சள் அட்டைக்கு 15 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை இலவசமாக
வழங்காவிட்டால் தி.மு.க., சார்பில் மஞ்சள் அட்டைகளை அரசுக்கு திரும்பி
கொடுப்போம்.
தொடர்ந்து காரைக்காலுக்கு ஒதுக்கப்படும் திட்டம் சார்ந்த பொருட்கள்
குறைக்கப்படுவது கண்டிக்கதக்கது. பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு
ஆங்கில வழி புத்தகங்கள் மற்றும் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை
சமச்சீர் ஆங்கில வழி புத்தகங்கள் வழங்கப்படவில்லை. கேட்டால் லாரி வேலை
நிறுத்தம் என்கின்றனர். கல்வித்துறையில் நிலவும் அலட்சியத்தால் இந்த
குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஒரு திட்டத்தை அரசு அறிவித்தால் அதற்கு எவ்வளவு
நிதி தேவை என கணக்கிட்டு செய்ய வேண்டும். புதுச்சேரியில் திட்டத்தை
செயல்படுத்திவிட்டு, காரைக்காலை புறக்கணிப்பது தொடர்கிறது. ரொட்டி,பால்
ஊழியர்களுக்கு 4 மாத சம்பளம் வழங்கவில்லை. மற்றும் சுற்றுலாத்துறையில்
பணியமர்த்தப்பட்ட கைடுகளுக்கு 7 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. சிறிய
மாநிலமான புதுச்சேரியில் திட்டத்தை செயல்படுத்துவதில் பல குழப்பம்
நிலவுகிறது. பி.ஆர்.டி.சி.யில் ஜே.என்.எம்., திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட
16 தாழ்தள பஸ்கள் டெப்போவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனால்
காரைக்காலுக்கு சில பஸ்கள் கேட்டும் அமைச்சர் வழங்கவில்லை. இவ்வாறு அவர்
கூறினார்.