/உள்ளூர் செய்திகள்/மதுரை/தேர்தல் விதிமீறல் வழக்கில் குஷ்புக்கு ஐகோர்ட் உத்தரவுதேர்தல் விதிமீறல் வழக்கில் குஷ்புக்கு ஐகோர்ட் உத்தரவு
தேர்தல் விதிமீறல் வழக்கில் குஷ்புக்கு ஐகோர்ட் உத்தரவு
தேர்தல் விதிமீறல் வழக்கில் குஷ்புக்கு ஐகோர்ட் உத்தரவு
தேர்தல் விதிமீறல் வழக்கில் குஷ்புக்கு ஐகோர்ட் உத்தரவு
ADDED : செப் 22, 2011 12:30 AM
மதுரை : தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் விதிகளுக்கு முரணாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட வழக்கில் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்து ஜாமின் மனு செய்ய நடிகை குஷ்புக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மற்றொருவழக்கில்முன்ஜாமின் வழங்கியது.சட்டசபை தேர்தலின் போது ஆண்டிப்பட்டியில் மார்ச் 26ல் பஸ் ஸ்டாண்டில் விதிகளுக்கு புறம்பாக குஷ்பு பிரசாரத்தில் ஈடுபட்டதாக தேர்தல் அதிகாரி மாதேஷ்வரன் புகார் செய்தார். அதன்படி குஷ்பு, தி.மு.க., நிர்வாகிகள் வைகைசேகர், மூக்கையா உட்பட ஒன்பது பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பி.சி.பட்டியிலும் தேர்தல் விதிகளை மீறி பிரசாரம் செய்ததாக குஷ்பு உட்பட மூவர் மீது வழக்கு பதிவானது.இவ்வழக்குகளில் முன்ஜாமின் கோரிய குஷ்பு மனு ஐகோர்ட் கிளையில் நீதிபதி ஆர்.மாலா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் பாண்டித்துரை, மோகன்குமார் ஆஜராயினர். முன்ஜாமினில் விட அரசு கூடுதல் வக்கீல் ராமர் ஆட்சேபம் தெரிவித்தார். ஆண்டிப்பட்டியில் பதிவான வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.இதனால் நீதிபதி, ''ஆண்டிப்பட்டி வழக்கில் குஷ்பு, சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்து ஜாமின் மனு செய்து, ஜாமின் பெறலாம்,'' என உத்தரவிட்டு மனுவை பைசல் செய்தார். பி.சி.பட்டியில் பதிவான வழக்கில் குஷ்புக்கு முன்ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.