Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/முழு நிதியுதவி கிடைக்காததற்கு காரணம்: லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., பளீச்

முழு நிதியுதவி கிடைக்காததற்கு காரணம்: லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., பளீச்

முழு நிதியுதவி கிடைக்காததற்கு காரணம்: லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., பளீச்

முழு நிதியுதவி கிடைக்காததற்கு காரணம்: லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., பளீச்

ADDED : ஆக 29, 2011 11:02 PM


Google News

புதுச்சேரி : 'புதுச்சேரியின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆலோசகர் ஒருவரை நியமிக்க வேண்டும்' என, லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., பேசினார்.

பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது: அரசியல் உறுதிப்பாடு இல்லாததாலும், திட்டங்களை தயாரிப்பதில் திறமையின்மையாலும் நமக்கு போதிய நிதி கிடைக்காமல் அவதிப்படுகிறோம். மத்திய அரசு நடப்பு நிதியாண்டிற்கு ரூ.2,750 கோடி திட்ட செலவிற்காக அனுமதித்துள்ளது. இதில், திட்ட பணிகளுக்கான மத்திய அரசின் மானியம் ரூ.379.77 கோடி, மத்திய அரசின் ஊக்குவிப்பு திட்டங்கள் ரூ.60 கோடி, ஆக 439.77 கோடி மட்டும் தான் மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளீர்கள். இது கிட்டத்தட்ட 16 சதவீதம் தான். மத்திய அரசிடம் இருந்து 76.4 சதவீதம் மானியம் கிடைத்த வருமானம் தற்போது 16 சதவீதம் கிடைக்கிறது. இப்போது வெளிச்சந்தையில் வாங்கி வைத்துள்ள கடன் ரூ.4040 கோடி. மேலும், இந்த ஆண்டு கடன் வாங்க உள்ளோம். வாங்கியுள்ள கடனுக்கு ஆண்டுதோறும் வட்டியாக ரூ.304 கோடி செலுத்துகிறோம். அசல் அதில் பாதி ரூ.147 கோடி. இந்த அளவில் சென்றால் கிட்டத்தட்ட கடனை அடைக்க 30 வருடம் ஆகும். அதுவரை வட்டியும் செலுத்த வேண்டும். கட்ட வேண்டிய அசல் தவணையை விட இருமடங்கு வட்டி கட்டுகிறோம். புதுச்சேரியின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆலோசகர் ஒருவரை நியமித்துக் கொண்டால் இன்னும் சிறப்பாகச் செயல்படலாம். பெருகி வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும். நேரு வீதியில் உள்ள பழைய சிறைச் சாலையை உடனே இடித்துவிட்டு, அங்கு அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் கட்ட வேண்டும். மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் எம்.சி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்களுக்கும் மானிய விலையில் லேப்டாப் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். மணக்குள விநாயகர், வேதபுரீஸ்வரர், வரதராஜப் பெருமாள் கோவில்களுக்கு கும்பாபிஷேக நிதி உதவி அளிக்கும் திட்டமும் வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் பேசினார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us