Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பிராந்தி என நினைத்து விஷம் குடித்த முதியவர் பலி

பிராந்தி என நினைத்து விஷம் குடித்த முதியவர் பலி

பிராந்தி என நினைத்து விஷம் குடித்த முதியவர் பலி

பிராந்தி என நினைத்து விஷம் குடித்த முதியவர் பலி

ADDED : அக் 01, 2011 11:30 PM


Google News

தென்காசி : அச்சன்புதூர் அருகே பிராந்தி என நினைத்து விஷத்தை குடித்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.

அச்சன்புதூர் அருகே வடகரை ஆசாரி நடுத் தெருவை சேர்ந்தவர் செண்பகம் (78). இவர் மேக்கரை அடவிநயினார் அணைக்கட்டு அருகேயுள்ள தோப்பிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு மதுபாட்டில் ஒன்று கிடந்துள்ளது. அதில் பிராந்திதான் இருக்கிறது என நினைத்த செண்பகம் அதனை எடுத்து குடித்துள்ளார். ஆனால் அந்த பாட்டிலில் இருந்தது பூச்சிக்கொல்லி மருந்து. சிறிது நேரம் கழித்துதான் அவரால் தான் குடித்தது விஷம் என உணர முடிந்தது.



அருகில் இருந்தவர்களிடம் அவர் தான் பிராந்தி என நினைத்து விஷத்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார். உடனே அவர்கள் அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செண்பகம் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் பற்றி அச்சன்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us