Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/நிகாமனந்தா மரணம் : இருவர் மீது வழக்கு

நிகாமனந்தா மரணம் : இருவர் மீது வழக்கு

நிகாமனந்தா மரணம் : இருவர் மீது வழக்கு

நிகாமனந்தா மரணம் : இருவர் மீது வழக்கு

UPDATED : ஆக 20, 2011 08:52 AMADDED : ஆக 20, 2011 05:30 AM


Google News
ஹரித்துவார்: கங்கை நதியை காப்பற்றுவதற்காக உயிர்நீத்த சுவாமி நிகாமனந்தா வழக்கில் சி.பி.ஐ இருவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சுவாமி நிகாமனந்தா (34). இவர் கங்கை நதிகரையில் அமைக்கப்பட்டு வரும் கல்குவாரிகளை அகற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். தொடர்ந்து அவர் உடல்நிலை மோசமானதால் மாவட்ட நிர்வாகம் ஏப்ரல் 27-ம் தேதி டேராடூனில் உள்ள இமாலயன் மருத்துவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் ஜூன் மாதம் 13-ம் தேதி இறந்ததாக மருத்துவமனையால் அறிவிக்கப்பட்டார். இவரது இறப்பில் மர்மம் இருப்பதாக பெற்றோர்கள்மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து மாநில அரசு சி.பி.ஐ.,விசாரணைக்கு <உத்தரவிட்டது. தொடர்ந்து விசாரணை நடத்திய சி.பி.ஐ.,யினர் சுவாமியின் இறப்பிற்கு இமாலயன் மருத்துவமனையின் டாக்டர் பி.கே. பட்னாகர் மற்றும் கல்குவாரி அதிபர் கணேஷ்குமார் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளனர் என்றும் டாக்டர் பட்னாகர் தலைமையிலான மருத்துவ குழுவினர் அளித்த மருந்து காரணமாக சுவாமி கோமா நிலைக்கு சென்று மரணமடைந்துள்ளார் என்றும் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us