/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/உள்நாட்டு மீனவர்களுக்கும் நிவாரணம் பருவதராஜகுல மீனவர் சங்கம் கோரிக்கைஉள்நாட்டு மீனவர்களுக்கும் நிவாரணம் பருவதராஜகுல மீனவர் சங்கம் கோரிக்கை
உள்நாட்டு மீனவர்களுக்கும் நிவாரணம் பருவதராஜகுல மீனவர் சங்கம் கோரிக்கை
உள்நாட்டு மீனவர்களுக்கும் நிவாரணம் பருவதராஜகுல மீனவர் சங்கம் கோரிக்கை
உள்நாட்டு மீனவர்களுக்கும் நிவாரணம் பருவதராஜகுல மீனவர் சங்கம் கோரிக்கை
ADDED : ஜூலை 19, 2011 12:29 AM
செஞ்சி : தமிழ்நாடு பருவதராஜகுல மீனவர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மேல்மலையனூரில் நடந்தது.
சங்கத்தின் மாநில தலைவர் அப்பாராஜ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மணி, ஜெயராமன், பொருளாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் துரை, அறங்காவலர் மாணிக்கம் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற மூன்று மீனவ சமூதாயத்தினரில், ஒருவருக்கு பேரவை தலைவர் பதவியும், ஒருவருக்கு மீன்வளத்துறை அமைச்சர் பதவியும் அளித்து சிறப்பித்த தமிழக முதல்வர் ஜெ.,வுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.மேலும் மீன் பிடி தடை காலத்தில் கடல் மீனவர்களுக்கு தமிழக அரசு 2,000 ரூபாய் நிவாரணம் வழங்குவதை போல், நாட்டு மீனவர்களுக்கும் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு வழங்க உள்ள பசுமை வீடு திட்டத்தில் பருவதராஜ குலத்தை சேர்ந்தவர்களுக்கும் வீடுகளை ஒதுக்கீடு தரவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர்.