UPDATED : ஆக 20, 2011 09:54 AM
ADDED : ஆக 19, 2011 05:45 PM
புதுச்சேரி:புதுவை கலெக்டர் ஜி.ராகேஷ் சந்திரா, சுனாமி நிதியில் முறைகேடு செய்ததாக சி.பி.ஐ., போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி டி ராமசுவாமி உத்தரவிட்டார். இந்த வழக்கு தொடர்பாக ராகேஷ் சந்திரா, நாளை முதல் 10 நாட்களுக்கு சென்னையில் சி.பி.ஐ., அதிகாரிகள் முன்பு ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதன் பின்னர் 2 நாட்களுக்கு ஒரு முறை சி.பி.ஐ., முன் ஆஜராகி மறு உத்தரவு வரும் வரை கையெழுத்திடவேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.