மோடியின் கஜகஸ்தான் பயணம் ரத்து ஏன்?
மோடியின் கஜகஸ்தான் பயணம் ரத்து ஏன்?
மோடியின் கஜகஸ்தான் பயணம் ரத்து ஏன்?
ADDED : ஜூன் 28, 2024 09:07 PM

புதுடில்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடியின் கஜகஸ்தான் பயண திட்டம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரமதராக மூன்றாம் முறையாக பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக இத்தாலி சென்று ஜி7 மாநாட்டில் பங்கேற்றார்.
இந்நிலையில் வரும் ஜூலை 3 மற்றும் 4 ஆகிய தேதிகளி்ல எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு கஜகஸ்தான் நாட்டின் தலைநகர் அஸ்தானா நகரில் நடக்கிறது.
இதில் பங்கேற்க மோடி கஜகஸ்தான் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதாகவும்,மோடிக்கு பதிலாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையிலான குழுவினர் கஜகஸ்தான் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரத்து ஏன் ?
பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் அதில் பங்கேற்று விவாதம் செய்ய உள்ளதால் இம்முடிவு என கூறப்படுகிறது.