/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மாற்றுதிறனாளிகளுக்கு தொழிற்கல்வி பயிற்சிமாற்றுதிறனாளிகளுக்கு தொழிற்கல்வி பயிற்சி
மாற்றுதிறனாளிகளுக்கு தொழிற்கல்வி பயிற்சி
மாற்றுதிறனாளிகளுக்கு தொழிற்கல்வி பயிற்சி
மாற்றுதிறனாளிகளுக்கு தொழிற்கல்வி பயிற்சி
ADDED : செப் 30, 2011 01:22 AM
சிவகங்கை : மாவட்டத்தில் கை, கால் மாற்றுத்திறனுடைய நபர்களுக்கு 3 மாத கால மொபைல் போன் சரிபார்ப்பு மற்றும் பராமரிப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இதற்கு 18 வயதிலிருந்து 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊனமுற்றோருக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். குறைந்த பட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி, அல்லது தோல்வியுற்றவர்களாக இருக்க வேண்டும். பயிற்சியின் போது உதவி தொகையாக மாதம் 300 ரூபாய் வழங்கப்படும். விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாற்றுத்திறானாளி அலுவலரிடம் விண்ணப்பித்து பயன் அடையலாம்.