/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காரைக்கால் தி.மு.க.,வினர் கையெழுத்து இயக்கம்காரைக்கால் தி.மு.க.,வினர் கையெழுத்து இயக்கம்
காரைக்கால் தி.மு.க.,வினர் கையெழுத்து இயக்கம்
காரைக்கால் தி.மு.க.,வினர் கையெழுத்து இயக்கம்
காரைக்கால் தி.மு.க.,வினர் கையெழுத்து இயக்கம்
ADDED : ஆக 22, 2011 10:51 PM
காரைக்கால் : காரைக்கால் அரசு மருத்துவனையின் அவலத்தை அரசுக்கு உணர்த்த தி.மு.க., சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
காரைக்கால் அரசு மருத்துவனையில் பல்வேறு வசதிகள் இருந்தும் டாக்டர்கள் இல்லை. போதிய செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் கிடையாது. உயிர்காக்கும் மருந்து, கருவிகள், சிறப்பு மருத்துவர்கள் இல்லாததால் விபத்தில் காயமடைந்தவர்கள் தமிழக மருத்துவமனைக்கு அனுப்படுகின்றனர். அதேபோல் விடுமுறை நாட்களில் விபத்து நடந்தால் காயமடைந்தவரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலையே காரைக்காலில் நிலவுகிறது. மருத்துவமனையின் மோசமான நிலையைக் கண்டித்து பல்வேறு கட்சிகள் மருத்துவமனைக்குப் பூட்டு போடும் போராட்டம், சவப்பாடை ஊர்வலம், கண்டன ஆர்பாட்டம் என பல நடத்தியும் அரசு செவிசாய்க்க வில்லை. இந்நிலையில் தி.மு.க.., சார்பில் மருத்துவமனையின் மோசமான நிலை குறித்து தெரியப்படுத்த கையெழுத்து இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. நாஜிம் எம்.எல்.ஏ., கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.3 நாட்களுக்கு மாவட்டம் முழுவதும் இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது.