/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/30 ஆண்டுகளுக்கு பின் ரேஷன் கடையில் குடிநீர் : விருதுநகர் கலெக்டர் பாலாஜி ஆருடம்30 ஆண்டுகளுக்கு பின் ரேஷன் கடையில் குடிநீர் : விருதுநகர் கலெக்டர் பாலாஜி ஆருடம்
30 ஆண்டுகளுக்கு பின் ரேஷன் கடையில் குடிநீர் : விருதுநகர் கலெக்டர் பாலாஜி ஆருடம்
30 ஆண்டுகளுக்கு பின் ரேஷன் கடையில் குடிநீர் : விருதுநகர் கலெக்டர் பாலாஜி ஆருடம்
30 ஆண்டுகளுக்கு பின் ரேஷன் கடையில் குடிநீர் : விருதுநகர் கலெக்டர் பாலாஜி ஆருடம்
ADDED : ஜூலை 27, 2011 10:30 PM
சிவகாசி : ''முப்பது ஆண்டுக்ளுக்கு பின் குடிநீரை ரேஷன் கடையில் வாங்கும் வாய்ப்பு உள்ளதாக,'' சிவகாசியில் நடந்த விழாவில், மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி விருதுநகர் கலெக்டர் பாலாஜி கூறினார்.
சிவகாசி மாரனேரியில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமை துவக்கி வைத்து அவர் பேசுகையில், ''நீர் நிலைகளில் 30 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை தற்போது இல்லை. 1930ல் 30 கோடி மக்கள் இருந்தனர். தற்போது 30 கோடிப்பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளனர்.வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோர் எண்ணிக்கை குறைய வேண்டும். அப்போதுதான் நாடு வளர்ச்சி பெறும். அடுத்த முப்பது ஆண்டுகளில் தண்ணீரை ரேஷன் கடையில் வாங்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதால், மக்கள் நீர் நிலைகளை சீரமைத்து பாதுகாக்க வேண்டும். இதே நிலை நீடித்தால் மனிதர்களுக்கும் சொட்டு நீர் பாசனம் வழங்கும் நிலையும் வந்து விடும்.
நீர் வளத்தை பாதுகாக்க வீடுகள், வணிக வளாகங்களில் மழைநீர் சேகரிப்பு வசதிகளை ஒரு மாதத்திற்குள் செய்திட வேண்டும். ஏற்கனவே ஏற்படுத்திய மழை நீர் சேகரிப்புகள் சேதமடைந்திருந்தால், 15 நாட்களுக்குள் சீரமைக்க வேண்டும். இது நமது சந்ததியினருக்கு செய்யும் முக்கிய பணியாக கருத வேண்டும்,'' என்றார்.