/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/வேட்பாளர் தேர்வில் காங்.,- பா.ம.க., நிலை...768 பேருக்கு எங்கே ஆள்பிடிப்பது?வேட்பாளர் தேர்வில் காங்.,- பா.ம.க., நிலை...768 பேருக்கு எங்கே ஆள்பிடிப்பது?
வேட்பாளர் தேர்வில் காங்.,- பா.ம.க., நிலை...768 பேருக்கு எங்கே ஆள்பிடிப்பது?
வேட்பாளர் தேர்வில் காங்.,- பா.ம.க., நிலை...768 பேருக்கு எங்கே ஆள்பிடிப்பது?
வேட்பாளர் தேர்வில் காங்.,- பா.ம.க., நிலை...768 பேருக்கு எங்கே ஆள்பிடிப்பது?
ADDED : செப் 26, 2011 10:59 PM
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க.,- தி.
மு.க.,- தே.மு.தி.க., கட்சிகள் பல்வேறு பதவிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளன. தேசிய கட்சியான காங்., மற்றும் பா.ம.க., உள்ளிட்ட உதிரிக் கட்சிகளின் நிலை பரிதாபமாக உள்ளது. இங்கு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 23 பேர், நகராட்சி தலைவர் பதவிக்கு நான்கு பேர், கவுன்சிலர்களுக்கு 123 பேர், பேரூராட்சி தலைவருக்கு 23 பேர், கவுன்சிலருக்கு போட்டியிட 363 பேர், ஒன்றிய கவுன்சிலருக்கு 232 பேர் என, மொத்தம் 768 வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்.
அனைத்தும்: இதில், தே.மு.தி.க., அனைத்து பதவிகளுக்கும் பட்டியலை அறிவித்து விட்டது.
அடுத்த கட்டமாக நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு அ.தி.மு.க.,- தி.மு.க., வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. அ.தி.மு.க., மாவட்ட கவுன்சிலர்களுக்கும், பட்டியலை அறிவித்துவிட்டது.
ஒருவர் கூட இல்லை: ஆனால், திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க., உள்ளாட்சி தேர்தலுக்கு, ஒரு வேட்பாளரை கூட அறிவிக்கவில்லை. காங்கிரசார் இன்னும் ஆலோசனையில் (!) தான் மூழ்கியுள்ளனர்.768 பதவிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்க முடியுமா? என, அக்கட்சியினரே ஆச்சரியத்துடனும், அதே நேரம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.வேட்பு மனுத்தாக்கலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இந்த கட்சிகளின் பாடு பரிதாபமாக உள்ளது.