துப்பாக்கி முனையில் தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு
துப்பாக்கி முனையில் தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு
துப்பாக்கி முனையில் தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு
ADDED : அக் 06, 2011 01:02 PM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்திலிருந்து கடலில் மீன்பிடிக்கச்சென்ற 513 விசைப்படகுகளை துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையில் நேற்று காலை மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், துப்பாக்கி முனையில் சுமார் 513 விசைப்படகுகளை சிறைபிடித்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த இந்திய கடற்படையினர், மீனவர்களை காப்பாற்ற முயற்சிக்காமல் திரும்பிச்சென்று விட்டனர். சுமார் 15 மணிநேரம் கழித்து, மீனவர்கள் இன்று விடுவிக்கப்பட்டனர்.


