/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/இன்ஜினியர் வீட்டில் தங்கநகைகள் திருட்டுஇன்ஜினியர் வீட்டில் தங்கநகைகள் திருட்டு
இன்ஜினியர் வீட்டில் தங்கநகைகள் திருட்டு
இன்ஜினியர் வீட்டில் தங்கநகைகள் திருட்டு
இன்ஜினியர் வீட்டில் தங்கநகைகள் திருட்டு
ADDED : செப் 22, 2011 12:45 AM
திருநெல்வேலி : பாளை.
அருகே ஓய்வு பெற்ற இன்ஜினியர் வீட்டில் தங்கநகைகள்
திருடப்பட்டது.பாளை. கே.டி.சி.நகர் அருணாசலநகர் சி காலனியை சேர்ந்தவர்
சீனிவாசன்(65). ஓய்வு பெற்ற இன்ஜினியர். கடந்த 8ம்தேதி இவர் தன் மனைவியுடன்
காசிக்கு புறப்பட்டுச்சென்றார். நேற்று வீட்டுக்கு திரும்பி வந்தார்.
அப்போது வீட்டின் முன்புறக்கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில்
இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. பீரோவில் இருந்த 16 கிராம்
எடையுள்ள 3 ஜோடி தங்க கம்மல்கள் திருடப்பட்டன. இதுகுறித்து பாளை. தாலுகா
ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பெரியசாமி, சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் விசாரணை
நடத்தினர். சம்பவ இடத்தில் தடய அறிவியல் அலுவலர்கள், கைரேகைப்பிரிவு
நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். சம்பவத்தில் தொடர்புடையவர்களை தனிப்படை
போலீசார் தேடி வருகின்றனர்.


