/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தியாகதுருகம் பஸ் நிறுத்தத்தில் ஆக்கிரமிப்பு: பயணிகள் அவதிதியாகதுருகம் பஸ் நிறுத்தத்தில் ஆக்கிரமிப்பு: பயணிகள் அவதி
தியாகதுருகம் பஸ் நிறுத்தத்தில் ஆக்கிரமிப்பு: பயணிகள் அவதி
தியாகதுருகம் பஸ் நிறுத்தத்தில் ஆக்கிரமிப்பு: பயணிகள் அவதி
தியாகதுருகம் பஸ் நிறுத்தத்தில் ஆக்கிரமிப்பு: பயணிகள் அவதி
ADDED : ஜூலை 13, 2011 01:12 AM
தியாகதுருகம் : தியாகதுருகத்தில் தள்ளுவண்டி ஆக்கிரமிப்புகள்
அதிகரித்துள்ளதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
தியாகதுருகம் பஸ் நிலையம்
அருகே செல்லும் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பஸ்கள் நின்று
செல்லும் நிறுத்தம் உள்ளது. இங்கு எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகம்
காணப்படும். இங்கிருந்து பிரிந்து செல்லும் திருக்கோவிலூர் சாலையோரம்
பயணிகள் காத்திருக்க போதிய இடமிருந்தும், தள்ளுவண்டி பழக்கடைக்காரர்களின்
ஆக்கிரமிப்பால் இடநெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள காமராஜர் சிலை
வரை இருந்த கடை கள் அனைத்தும் நாளடைவில் தள்ளுவண்டிகளை சாலையில் நிறுத்தி
வியாபாரம் செய்யும் அளவுக்கு ஆக்கிரமித்துள்ளனர். நடுரோட்டில் பயணிகள்
நிற்கவேண்டிய நிலை உள் ளது. மூன்று சாலைகள் சந்திக்கும் இடமாக இருப் பதால்
அடிக்கடி வாகனங்கள் செல்லும் இப்பகுதியில் ஓரமாக நிற்க முடியாமல் பயணிகள்
அவதிப்பட்டு வருகின்றனர். மாலை வேளைகளில் பள்ளி முடிந்து செல்லும்
மாணவர்கள் பஸ்சுக்காக காத்திருக்க இடமின்றி தவிக்கின்றனர்.