/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/அடைக்கலபட்டணம் பரிசுத்தபவுல் ஆலயத்தில் ஸ்தோத்திர பண்டிகை நாளை துவக்கம்அடைக்கலபட்டணம் பரிசுத்தபவுல் ஆலயத்தில் ஸ்தோத்திர பண்டிகை நாளை துவக்கம்
அடைக்கலபட்டணம் பரிசுத்தபவுல் ஆலயத்தில் ஸ்தோத்திர பண்டிகை நாளை துவக்கம்
அடைக்கலபட்டணம் பரிசுத்தபவுல் ஆலயத்தில் ஸ்தோத்திர பண்டிகை நாளை துவக்கம்
அடைக்கலபட்டணம் பரிசுத்தபவுல் ஆலயத்தில் ஸ்தோத்திர பண்டிகை நாளை துவக்கம்
ADDED : ஆக 11, 2011 02:19 AM
பாவூர்சத்திரம் : அடைக்கலப்பட்டணம் பரிசுத்தபவுலின் ஆலய வளாகத்தில் 37வது ஸ்தோத்திர பண்டிகை நாளை (12ம் தேதி) முதல் மூன்று நாள் நடக்கிறது.
ஸ்தோத்திர பண்டிகையை முன்னிட்டு முதல்நாள் இரவு 7மணிக்கு செங்கோட்டை சேகரகுரு சாமுவேல் மதுரம் ஆயத்த ஆராதனை நடத்தி பண்டிகையை துவக்கி வைக்கின்றார். இரவு 8 மணிக்கு மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சி நடக்கிறது. 13ம் தேதி காலை 5 மணிக்கு மன்னாறயன்தட்டு சேகரகுரு செல்வமணி அருணோதய பிரார்த்தனை நடத்துகிறார். 9 மணிக்கு சுவிசேஷபுரம் சேகரகுரு டேனியல் பால்துரை பரிசுத்த ஞானஸ்நான ஆராதனை நடத்துகிறார். 10.30 மணிக்கு வாலிபர் சிறப்பு கூடுகையில் ஸ்டீபன் ராஜா செய்தி வழங்குகிறார். மதியம் 2 மணிக்கு நெல்லை திருமண்டல பேராயர் கிறிஸ்துதாஸ் ஸ்தோத்திரப்பண்டிகை ஆராதனை நடத்துகின்றார். 4 மணிக்கு பொருட்கள் ஏலம் நடக்கிறது. 4.30மணிக்கு பெண்கள் கூட்டத்தில் தேவர்குளம் சகோதரி ஸ்டெல்லா சாமுவேல் செய்தி வழங்குகிறார். இரவு 7மணிக்கு சிஎம்எஸ்., கலை நிகழ்ச்சிகளும், 9 மணிக்கு இட்டமொழிபுதூர் ஜேக்கப் பஜனை பிரசங்கமும் நடக்கிறது.
14ம் தேதி காலை 5 மணிக்கு சிவகிரி சேகரகுரு ஞானப்பிரகாசம் லித்தானியா ஆராதனை நடத்துகிறார். 9 மணிக்கு ராஜா கிறிஸ்டோபர் பரிசுத்த திருவிருந்து ஆராதனை நடத்துகிறார். 11.30 மணிக்கு திருமறைத்தேர்வு நடக்கிறது. மதியம் 2 மணிக்கு வருடாந்திர கூட்டம் நடக்கிறது. வாடியூர் பங்குத்தந்தை அந்தோணி சேவியர் சிறப்பு செய்தி வழங்குகிறார். மாலை 6 மணிக்கு கீத ஆராதனை நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு நாசரேத் எபன்சிங்கர்ஸ் ஸ்தோத்திர ஜெபம் நடத்துகிறார். ஏற்பாடுகளை கோவிலூற்று சேகரகுரு ஜான்கென்னடி ஆலோசனையின் பேரில் சபை மக்கள், சபை ஊழியர்கள், ஆசிரியர், ஆசிரியைகள் செய்துள்ளனர்.