நகைக்கடன் வழங்க திணறும் விவசாய கூட்டுறவு சங்கங்கள்
நகைக்கடன் வழங்க திணறும் விவசாய கூட்டுறவு சங்கங்கள்
நகைக்கடன் வழங்க திணறும் விவசாய கூட்டுறவு சங்கங்கள்
ADDED : செப் 10, 2011 01:18 AM
தேனி :தொடக்க விவசாய கூட்டுறவு சங்கங்கள் நகைக்கடன் வழங்க முடியாமல் சிரமப்படுகின்றன.விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் தொடக்க விவசாய கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் கேட்டு வரும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஆனால் மத்திய கூட்டுறவு வங்கியிடம் இருந்து நிதி உதவி கிடைக்காததால் நகைக்கடன் வழங்க முடியாமல் தொடக்க விவசாய கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதனால் கிராமங்களில் விவசாய பணிகள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றன.