/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தியாகதுருகம் பேரூராட்சி தலைவருக்கு பிரதான கட்சிகளிடையே கடும்போட்டிதியாகதுருகம் பேரூராட்சி தலைவருக்கு பிரதான கட்சிகளிடையே கடும்போட்டி
தியாகதுருகம் பேரூராட்சி தலைவருக்கு பிரதான கட்சிகளிடையே கடும்போட்டி
தியாகதுருகம் பேரூராட்சி தலைவருக்கு பிரதான கட்சிகளிடையே கடும்போட்டி
தியாகதுருகம் பேரூராட்சி தலைவருக்கு பிரதான கட்சிகளிடையே கடும்போட்டி
ADDED : செப் 26, 2011 10:41 PM
தியாகதுருகம் : தியாகதுருகம் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது.
தியாகதுருகம் பேரூராட்சி மன்ற தலைவர் பதவியை பிடிக்க பிரதான கட்சிகளிடையே பலத்த போட்டி உருவாகியுள் ளது. இப்பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது பேரூராட்சி மன்ற தலைவராக இருக்கும் அருணா மணிமாறனுக்கு தி.மு.க., வில் மீண்டும் சீட் தரப்பட்டுள்ளது. இவர் நகர செயலாளர் பொன் ராமகிருஷ்ணனின் பேத்தியாவார். அ.தி.மு.க., வில் நகர பொருளாளர் வெங்கடாஜலபதி மனைவி ராஜேஸ்வரிக்கு முதலில் சீட் ஒதுக்கப்பட்டது. இது குறித்து அ.தி.மு.க., வினரிடையே அதிருப்தியை எழுந்ததால் நகர செயலாளர் ராஜூ மனைவி விஜயாவுக்கு வாய்ப்பு மாற்றி வழங்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க., சார்பில் நகர செயலாளர் முருகன் மனைவி செல்வி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பிரதான கட்சிகளான தி.மு.க., நகர செயலாளரின் பேத்தி, அ.தி.மு.க., தே.மு.தி.க., நகர செயலாளர்களின் மனைவி ஆகிய மூவரும் தேர்தலில் போட்டியிடுவதால் தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது.