Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/திருப்பூர் நகை அடகு கடையில் கொள்ளை :ஓசூரில் போலீஸ் விசாரணை

திருப்பூர் நகை அடகு கடையில் கொள்ளை :ஓசூரில் போலீஸ் விசாரணை

திருப்பூர் நகை அடகு கடையில் கொள்ளை :ஓசூரில் போலீஸ் விசாரணை

திருப்பூர் நகை அடகு கடையில் கொள்ளை :ஓசூரில் போலீஸ் விசாரணை

ADDED : செப் 27, 2011 11:31 PM


Google News
ஓசூர்: திருப்பூரில், 1,389 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர் ஓசூரில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீஸார் அந்த கொள்ளையர் படங்கள் உள்ள துண்டு பிரசுரங்களை ஓட்டி தேடி வருகின்றனர்.

திருப்பூர் காங்கேயம் சாலையில் முத்தூட் நகை அடகு கடையில், கடந்த 23ம் தேதி காலை வழக்கம்போல் கிளை மேலாளர் மதிவாணன் அலுவலகத்தை திறந்துள்ளார். துப்புரவு பணியாளர்கள் அலுவலகத்தை திறந்து துப்புரவு செய்துள்ளனர். அப்போது, திடீரென அலுவலகத்தில் புகுந்த, 6 பேர் கும்பல் மேலாளர் மதிவாணன், அலுவலக ஊழியர்கள், துப்புரவு பணியாளர்களை சரமாரியாக தாக்கி அவர்கள் கை, கால்கள் மற்றும் கண்ணை துணியால் கட்டி போட்டனர். அதன்பின் கத்தி முனையில் அந்த கும்பல் லாக்கரை திறந்து நகை, பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றனர். போலீஸார் நடத்திய விசாரணையில்,1, 389 பவுன் நகை, 2 லட்சத்து, 36 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரிந்தது. கொள்ளையர்களை பிடிக்க எட்டு தனிப்படை அமைத்த திருப்பூர் போலீஸார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கொள்ளையடித்த நபர்கள் பழைய குற்றவாளிகளாக இருக்க கூடும் என திருப்பூர் போலீஸார் சந்தேகிக்கின்றனர். குறிப்பாக கோவையை சேர்ந்த பல்வேறு பழைய கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய ஜம்முநாதன் (30), ஆனந்தன் (33) ஆகியோர் தலைமையில் ஆறு பேர் திருப்பூரில் நகை, பணத்தை கொள்ளையடித்துள்ளது தனிப்படை விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது இந்த கொள்ளையர்கள் கர்நாடகா எல்லையோர பகுதியில் பதுங்கியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அதனால், திருப்பூர் போலீஸார் இந்த இரு கொள்ளையர் படங்களை மெயில் மூலம் ஓசூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பியுள்ளனர். ஓசூர் போலீஸார் பகுதியில் ஜம்முநாதன், ஆனந்தன் ஆகியோர் புகை படங்களை நகரின் பல்வேறு பகுதியில் ஓட்டி தேடி வருகின்றனர். அந்த கொள்ளையர் படங்கள் ஓட்டிய துண்டுபிரசுரத்தில் இருவர் சம்பந்தப்பட்ட பழைய வழக்குகள், அவர்கள் பற்றிய விபரங்கள் குறிப்பிடப்பட்டு தகவல் அறிந்தால் போலீஸாருக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us