/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/என்.ஆர். காங்., விதி மீறல் வைத்திலிங்கம் கண்டனம்என்.ஆர். காங்., விதி மீறல் வைத்திலிங்கம் கண்டனம்
என்.ஆர். காங்., விதி மீறல் வைத்திலிங்கம் கண்டனம்
என்.ஆர். காங்., விதி மீறல் வைத்திலிங்கம் கண்டனம்
என்.ஆர். காங்., விதி மீறல் வைத்திலிங்கம் கண்டனம்
ADDED : செப் 27, 2011 11:50 PM
புதுச்சேரி : 'மத்திய போலீஸ் படையினரையும், பார்வையாளர்களையும் அழைத்து தேர்தலை நடத்த வேண்டும்' என, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வைத்திலிங்கம் கூறினார்.இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:ஆளுங்கட்சியினர் அராஜகமான முறையில் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
சிகப்பு விளக்கு பொருத்தப்பட்ட அரசு வாகனத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்துக்குள் வந்துள்ளனர். இது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும், நாங்கள் மனு தாக்கல் செய்து கொண்டிருந்தபோது, முதல்வர் உள்ளிட்டோர் உள்ளே வந்தனர். 'முதல்வர் வந்துள்ளார், அவர் தரும் மனுவை வாங்கி கொள்ளுங்கள்' என அதிகாரத்துடன் பேசினர். தேர்தல் அதிகாரியை மிரட்டுவது போல இருந்தது. எங்கள் வேட்பாளர் மனு தாக்கல் செய்ய சென்றபோது 4 பேரை மட்டுமே அலுவலக வளாகத்தில் அனுமதித்தனர். ஆனால், என்.ஆர். காங்., வேட்பாளர் மனு செய்தபோது, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலை சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் உள்ளே இருந்தனர். இதை போலீஸ் துறை எப்படி அனுமதித்தது... நாங்கள் வெளியே வந்து, இதுதொடர்பாக கேட்டபோது, போலீஸ் துறையினர் சரியான பதில் கூறவில்லை. முதல்வரே இதுபோல நடந்து கொண்டால் மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும். புதுச்சேரியில் தினம் ஒரு கொலை நடக்கிறது. 4 மாதங்களில் 25 கொலைகள் நடந்துள்ளது. எதிர்கட்சியைச் சேர்ந்தவர்கள் மிரட்டப்படுகின்றனர். முதல்வர் எதிரிலேயே அடிதடி நடந்து போலீசாரை பிடித்துத் தள்ளினர். மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. என்.ஆர். காங்., வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பி உள்ளோம். அகில இந்திய காங்., தலைவர்களும், தேர்தல் ஆணைய அதிகாரிகளை அணுகி இங்கே நடந்துள்ள குறைபாடுகளை விளக்கி கூறுவர்.
தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும் என்றால், வெளிமாநில போலீசாரையும், மத்திய போலீசாரையும் அழைக்க வேண்டும். இந்திரா நகர் தொகுதியில் 7 வார்டுக்கும் 7 பார்வையாளர்களை வெளியில் இருந்து அழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். காங்., தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாள் உடனிருந்தனர்.