தூத்துக்குடியில் பல கோடி மதிப்பு சரக்குகள் தேக்கம்
தூத்துக்குடியில் பல கோடி மதிப்பு சரக்குகள் தேக்கம்
தூத்துக்குடியில் பல கோடி மதிப்பு சரக்குகள் தேக்கம்
ADDED : ஆக 24, 2011 12:56 AM
தூத்துக்குடி : தொடரும் லாரி ஸ்டிரைக்கால், தூத்துக்குடி துறைமுகத்தில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் தேங்கியுள்ளன.டீசல்விலை, சுங்க வரியை குறைக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, லாரி உரிமையாளர்கள் நேற்று ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லாரிகள் ஓடாததால், தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்திற்கு கப்பலில் வந்த உரம், மரத்தடி, நிலக்கரி உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், வெளியூர்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் தேங்கியுள்ளன. இதுபோல, பல டன் உப்பு, கோவில்பட்டியில் தீப்பெட்டி பண்டல் தேங்கி உள்ளன.