ADDED : செப் 26, 2011 09:13 PM
புதுடில்லி : காங்கிரஸ் தலைவர் சோனியாடவ, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் சந்தித்துள்ள நிலையில், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.
2ஜி முறைகேட்டில், அப்போதைய நிதியமைச்சரும், தற்போதைய <உள்துறை அமைச்சருமான சிதம்பரத்திற்கு பங்கு இருப்பதாக நிதியமைச்சகம், பிரதமர் அலுவலகத்திற்கு சமீபத்தில் கடிதம் அனுப்பியிருந்தது. இந்த கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. இதன்மூலம், சிதம்பரத்திற்கும், பிரணாப்பிற்கும் இடையே இருந்த மோதல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில், சிதம்பரம் குற்றமற்றவர் என்றும், அவர் மேல் தனக்கு முழுமையாக நம்பிக்கை உள்ளது என்று அமெரிக்காவில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்திருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவை, சிதம்பரம் சந்தித்து தன் நிலையை விளக்கிக் கூறினார். அவர் ராஜினாமா செய்யவும் தயாராக இருப்பதாக சிதம்பரம் சோனியாவிடம் தெரிவித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் சோனியாவை சந்தித்தார். சந்திப்பிற்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த பிரணாப் கூறியதாவது, கட்சி மற்றும் மத்திய அரசின் வலுவான தூண் சிதம்பரம் என்றும், அவர் தனது சிறந்த நண்பர் என்று அவர் கூறினார். இந்நிலையில், சிதம்பரத்திற்கு, தி.மு.க.தலைவர் கருணாநிதி ஆதரவு தருவதாக அறிவித்துள்ளார்.


