/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/அடிக்கடி ரத்தாகும் பஸ்கள் : மாணவர்கள் தவிப்புஅடிக்கடி ரத்தாகும் பஸ்கள் : மாணவர்கள் தவிப்பு
அடிக்கடி ரத்தாகும் பஸ்கள் : மாணவர்கள் தவிப்பு
அடிக்கடி ரத்தாகும் பஸ்கள் : மாணவர்கள் தவிப்பு
அடிக்கடி ரத்தாகும் பஸ்கள் : மாணவர்கள் தவிப்பு
ADDED : ஜூலை 11, 2011 10:42 PM
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்கள் அடிக்கடி ரத்து செய்யப்படுவதால் பொதுமக்கள், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழநிக்கு, காலை 8.15 மணிக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. பழநி கல்லூரி, பள்ளி மாணவிகளுக்கு இந்த பஸ் வரப்பிரசாதமாக உள்ளது. வழி கிராமங்களை சேர்ந்த மாணவிகள் இந்த பஸ்சில் சென்றால், குறித்த நேரத்தில் கல்லூரிக்கு செல்ல முடியும். ஆனால் முன் அறிவிப்பு இன்றி அடிக்கடி நிறுத்தப்படுகிறது. இதற்கு அடுத்து 8.30 மணிக்கு பஸ் இயக்கப்படுகிறது. இதில் சென்றால் குறித்த நேரத்தில் கல்லூரிக்கு செல்ல முடியாது. செம்பட்டி- ஒட்டன்சத்திரம் பஸ்சும் அடிக்கடி நிறுத்தப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். பஸ்களை எப்போதும் போல் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.