/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சபரி கல்வியியல் கல்லூரியில் சேர்க்கை ஆணை வழங்கும் விழாசபரி கல்வியியல் கல்லூரியில் சேர்க்கை ஆணை வழங்கும் விழா
சபரி கல்வியியல் கல்லூரியில் சேர்க்கை ஆணை வழங்கும் விழா
சபரி கல்வியியல் கல்லூரியில் சேர்க்கை ஆணை வழங்கும் விழா
சபரி கல்வியியல் கல்லூரியில் சேர்க்கை ஆணை வழங்கும் விழா
ADDED : ஆக 11, 2011 02:53 AM
புதுச்சேரி:சபரி கல்வியியல் கல்லூரியில் 50 ஏழை மாணவர்களுக்கு இலவச
சேர்க்கை ஆணை வழங்கும் விழா நடந்தது.சபரி கல்வி குழும தாளாளர் மனோகரன்
தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சீனுவாசன் வரவேற்றார். சிறப்பு
விருந்தினராக முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு சேர்க்கை ஆணையை
வழங்கினார். விழாவில் பெரியசாமி எம்.எல்.ஏ., பேசுகையில்; வாழ்க்கையில்
கல்வி மிக அவசியமானது. ஆயிரம் காணி நிலம் வைத்திருப்பவர்களை விட கல்வி
கற்றவர்களுக்கே மதிப்பும், மரியாதையும் அதிகம்.யார் வேண்டுமானாலும்
முதல்வராக வரலாம். ஆனால் முதல்வராக இருப்பதற்கு ரங்கசாமிக்கு அதிக தகுதி
இருக்கிறது. ஒவ்வொரு கட்சிக்கும் கோட்பாடு தனியாக இருக்கலாம். அது வேறு,
நெட்டப்பாக்கம் தொகுதியில் இருப்பவர்கள் வசதி படைத்தவர்கள் என்று தான்
நினைத்தேன்.
ஆனால் தேர்தல் பணியில் இருந்த போது இது ஏழ்மையான தொகுதி என்பதை அறிந்தேன்.
இங்கு அதிகமான தொழிற்சாலைகள் இருந்தாலும், உள்ளூர் இளைஞர்களுக்கு
வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.
சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் தொழிற்சாலைகள் அதிகம் இருக்கிறது.
இந்நிலையை முதல்வர் மாற்ற வேண்டும் என்றார். சபரி கல்வியியல் கல்லூரி
முதல்வர் தினேசன், துணை முதல்வர் குமரன், செவிலியர் கல்லூரி முதல்வர்
ஜெனிஷ்டாமேரி, துணை முதல்வர் உமா, பிரிட்ஜ் அகாடமி இயக்குனர் ஜீத் உட்பட
பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர். பேராசிரியர்
கலியவரதன் நன்றி கூறினார்.