Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/10 டன் காய்கறி வரத்து குறைந்தது

10 டன் காய்கறி வரத்து குறைந்தது

10 டன் காய்கறி வரத்து குறைந்தது

10 டன் காய்கறி வரத்து குறைந்தது

ADDED : ஆக 05, 2011 12:46 AM


Google News
திருப்பூர் : திருப்பூர் தெற்கு உழவர் சந்தைக்கு நேற்று 10 டன் வரை காய்கறி வரத்து குறைந்தது; என்றாலும் கூட, தட்டுப்பாடு ஏற்படாததால் காய்கறி விலை ஏற்றம் பெறவில்லை.அவினாசி, பல்லடம், பொங்கலூர் சுற்றுப்பகுதிகள், பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருப்பூர் தெற்கு உழவர் சந்தைக்கு காய்கறி கொண்டு வரப்படுகின்றன. நாளொன்றுக்கு சராசரியாக 800 விவசாயிகள், 65 டன் வரை சந்தைக்கு காய்கறி கொண்டு வருகின்றனர். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நுகர்வோர் தேவைக்கேற்ப காய்கறி கொள்முதல் செய்வதற்காக சந்தைக்கு வருகின்றனர்.

இம்மாதத்தின் சிறப்பு தினமான ஆடிப்பெருக்கு நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. கோவில்களில் சிறப்பு வழிபாடு, ஆற்றோரங்களில் வழிபாடு நடத்துவதற்காக விவசாயிகள் பலரும் சென்று விட்டனர். இதனால், நேற்று சந்தைக்கு காய்கறி வரத்து 52 டன்னாக குறைந்தது.தெற்கு உழவர் சந்தை நிர்வாக அலுவலர் அறிவழகன் கூறியதாவது:

சந்தைக்கு வழக்கமாக 65 முதல் 70 டன் வரை காய்கறி வரத்து இருக்கும். நேற்று முன்தினம் ஆடிப் பெருக்கு தினம் என்பதால், பெரும்பாலான விவசாயி கள் வழிபாடுகளுக்காக சென்று விட்டனர்; குறைந்தளவு விவசாயிகளே காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். வழக்கத்தைவிட, சந்தையில் ஏழு முதல் 10 டன் வரை காய்கறி வரத்து குறைந்திருந்தது. தட்டுப்பாடு ஏற்படாததால், விலை ஏற்றம் இன்றி காணப்பட்டது, என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us