ஜம்முவில் போராட்டம்: பா.ஜ., மிரட்டல்
ஜம்முவில் போராட்டம்: பா.ஜ., மிரட்டல்
ஜம்முவில் போராட்டம்: பா.ஜ., மிரட்டல்
UPDATED : ஆக 09, 2011 03:36 AM
ADDED : ஆக 09, 2011 12:47 AM
ஜம்மு : காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் உள்ள மத்திய பல்கலைக் கழகத்துக்கு, துணை வேந்தரை நியமிக்கக் கோரி போராட்டம் நடத்தப் போவதாக, பாரதிய ஜனதா எச்சரித்துள்ளது.
ஜம்முவில், நீண்ட நாள் கோரிக்கையான, மத்திய பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்பல்கலைக் கழகம் கட்டி முடிக்கப்பட்டும், துணைவேந்தர் மற்றும் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படாமல், செயல்படாத நிலையில் உள்ளது. வரும் 25ம் தேதிக்குள், இப்பல்கலைக் கழகத்துக்கு துணை வேந்தர் நியமிக்கப்படாவிட்டால், ஜம்மு முழுவதும் போராட்டம் நடத்தப் போவதாக, பா.ஜ., எம்.எல்.ஏ., ஜுகல் கி÷ஷார் சர்மா தெரிவித்துள்ளார். இக்கோரிக்கையை வற்புறுத்தி, ஜம்மு பகுதி மக்கள் அமைப்பினர், கடந்த 15 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


