/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இந்திரா நகர் இடைத்தேர்தலில் மூன்று மனுக்கள் தள்ளுபடிஇந்திரா நகர் இடைத்தேர்தலில் மூன்று மனுக்கள் தள்ளுபடி
இந்திரா நகர் இடைத்தேர்தலில் மூன்று மனுக்கள் தள்ளுபடி
இந்திரா நகர் இடைத்தேர்தலில் மூன்று மனுக்கள் தள்ளுபடி
இந்திரா நகர் இடைத்தேர்தலில் மூன்று மனுக்கள் தள்ளுபடி
ADDED : செப் 27, 2011 11:50 PM
புதுச்சேரி : இந்திரா நகர் தொகுதி இடைத் தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட 10 வேட்பு மனுக்களில், மூன்று மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.இந்திரா நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19ம் தேதி துவங்கியது.
அ.தி.மு.க., சார்பில் சுத்துக்கேணி பாஸ்கரன், இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் சண்முகம், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக வைத்தியநாதன், காங்., சார்பில் ஆறுமுகம், என்.ஆர்.காங்., சார்பில் தமிழ்ச்செல்வன், சுயேச்சை வேட்பாளர்களாக மண்ணாடிப்பட்டு வீரராகவன், புதுப்பேட்டை தமிழ்ச்செல்வம், நெல்லித்தோப்பு சிட்டிபாபு உட்பட மொத்தம் 10 பேர், 13 மனுக்களைத் தாக்கல் செய்தனர்.இந்த மனுக்கள் மீதான பரிசீலனை, காந்தி நகர் தொழிலாளர் துறை அலுவலகத்தில் நேற்று நடந்தது. தேர்தல் நடத்தும் அதிகாரி மலர்க்கண்ணன், மனுக்களைப் பரிசீலனை செய்தார். வேட்பாளர்கள், முகவர்கள், முன் மொழிந்தவர், வேட்பாளரால் நியமிக்கப்பட்டவர், தேர்தல் பார்வையாளர் ஆகியோர் முன்னிலையில் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.அப்போது, வேட்பு மனு தாக்கலின்போது என்.ஆர்.காங்., வேட்பாளர் விதிமுறையை மீறி உள்ளதால், அவரது மனுவை ஏற்கக் கூடாது என, காங்., மற்றும் அ.தி.மு.க., தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இறுதியில், அ.தி. மு.க., மாற்று வேட்பாளர் சுப்ரமணி, காங்., மாற்று வேட்பாளர் மோகன், சுயேச்சை வேட்பாளர் சிட்டிபாபு ஆகியோரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.மனுக்களை, நாளை (29ம் தேதி) மாலை 3 மணிக்குள் வாபஸ் பெறலாம். அதைத் தொடர்ந்து, வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.