/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சுயேச்சை வேட்பாளர்களுக்கு மக்களிடம் ஓட்டுகேட்க கூச்சம்சுயேச்சை வேட்பாளர்களுக்கு மக்களிடம் ஓட்டுகேட்க கூச்சம்
சுயேச்சை வேட்பாளர்களுக்கு மக்களிடம் ஓட்டுகேட்க கூச்சம்
சுயேச்சை வேட்பாளர்களுக்கு மக்களிடம் ஓட்டுகேட்க கூச்சம்
சுயேச்சை வேட்பாளர்களுக்கு மக்களிடம் ஓட்டுகேட்க கூச்சம்
ADDED : அக் 08, 2011 12:28 AM
திருப்பூர் : உள்ளாட்சி தேர்தலில் புதிதாக போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்கள், மக்களிடம் சென்று ஓட்டு கேட்க கூச்சப்படுகின்றனர்.உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் ஒன்பதே நாட்கள் இருக்கின்றன.
ஆனால், தேர்தல் களம் சூடுபிடிக்கவில்லை. கூட்டணியாக இருந்த அரசியல் கட்சிகள் பிரிந்து நிற்பதால் ஓட்டுகள் சிதறி, நமக்கும் கணிசமான ஓட்டு கிடைக்கும் என நம்பி அதிக அளவில் சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். ஆனால், திறந்தவெளி ஜீப்பில் சென்று பிரசாரம் செய்யக்கூடிய அளவில் சுயேச்சைகளுக்கு 'பலம்' இருப்பதில்லை. கையிருப்பு நிதியை கணக்கு போட்டு கச்சிதமாக செலவு செய்கின்றனர். குறிப்பிட்ட சில வார்டுகளில், முக்கிய கட்சி வேட்பாளர்களின் ஓட்டுக்களை பிரிக்க, சில சுயேச்சை வேட்பாளர்களை எதிர்க்கட்சியினர் நிறுத்தி, வாக்காளர்கள் 'குழப்ப' காய் நகர்த்தி வருகின்றனர்.சுயேச்சை வேட்பாளர்கள் பிரசாரத்துக்கு செல்லும்போது, தெரிந்த நண்பர்கள், தங்களது உறவினர்கள் மூலமாக ஆதரவு கேட்கின்றனர். சில சுயேச்சை வேட்பாளர்கள் பிரசாரத்துக்கு வந்தாலும், வார்டு மக்கள் முன், கைகூப்பி, 'எனக்கு ஓட்டு போடுங்க; கவுன்சிலராக தேர்ந்தெடுங்கள்,' என, வாய் திறந்து பேசுவதில்லை. கைகளை கூப்பியபடி, நகர்ந்து விடுகின்றனர். சிலருக்கு வீதிகளில் மக்களை பார்த்ததும் சிரிப்பு வந்து விடுகிறது; மக்களுக்கோ எரிச்சல் ஏற்படுகிறது.


