/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஊருக்குள் நுழைய ரவுடிக்கு தடைவிதிக்க பரிந்துரைஊருக்குள் நுழைய ரவுடிக்கு தடைவிதிக்க பரிந்துரை
ஊருக்குள் நுழைய ரவுடிக்கு தடைவிதிக்க பரிந்துரை
ஊருக்குள் நுழைய ரவுடிக்கு தடைவிதிக்க பரிந்துரை
ஊருக்குள் நுழைய ரவுடிக்கு தடைவிதிக்க பரிந்துரை
ADDED : செப் 20, 2011 10:44 PM
புதுச்சேரி : இரண்டு ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை விதிக்க போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
உப்பளம் அம்பேத்கர் சாலை வரதப்பிள்ளை தோட்டத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் ,31. இவர் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரால் இந்தப் பகுதியில் பிரச்னை வரும் என்பதால், நாகராஜ் மூன்று மாதம் ஊருக்குள் நுழைய தடை விதிக்குமாறு சப் கலெக்டருக்கு முதலியார்பேட்டை போலீசார் பரிந்துரை செய்துள் ளனர். பாலாஜி நகரை சேர்ந்த லூர்துராஜ், 26, என்பவரை உழவர்கரை பகுதிக்குள் நுழைய தடை விதிக்குமாறு சப் கலெக்டருக்கு ரெட்டியார்பாளையம் போலீசார் பரிந்துரை செய்துள் ளனர்.