/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/டீசலுக்கு விற்பனைவரி விலக்கு அளிக்க வேண்டும் போக்குவரத்து இடைக்கமிட்டி மாநாட்டில் வலியுறுத்தல்டீசலுக்கு விற்பனைவரி விலக்கு அளிக்க வேண்டும் போக்குவரத்து இடைக்கமிட்டி மாநாட்டில் வலியுறுத்தல்
டீசலுக்கு விற்பனைவரி விலக்கு அளிக்க வேண்டும் போக்குவரத்து இடைக்கமிட்டி மாநாட்டில் வலியுறுத்தல்
டீசலுக்கு விற்பனைவரி விலக்கு அளிக்க வேண்டும் போக்குவரத்து இடைக்கமிட்டி மாநாட்டில் வலியுறுத்தல்
டீசலுக்கு விற்பனைவரி விலக்கு அளிக்க வேண்டும் போக்குவரத்து இடைக்கமிட்டி மாநாட்டில் வலியுறுத்தல்
திருநெல்வேலி : போக்குவரத்துக்கழகங்கள் பயன்படுத்தும் டீசலுக்கு விற்பனை வரி விலக்கு அளிக்க நெல்லையில் மா.கம்யூ., போக்குவரத்து இடைக்கமிட்டி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
9 பேர் கொண்ட புதிய இடைக்கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. இடைக்கமிட்டி செயலாளராக மனோகரன் தேர்வு செய்யப்பட்டார். பெட்ரோல், டீசல் விலைஉயர்வை மத்திய அரசு வாபஸ் பெறுவது, அனைத்து தரப்பு மக்களுக்கும் பொது விநியோக திட்டத்தை விரிவுபடுத்துவது, புதிய பென்ஷன் சீர்திருத்த மசோதாவை மத்திய அரசு கைவிடுவது, போக்குவரத்துக்கழகங்கள் பயன்படுத்தும் டீசலுக்கு விற்பனைவரி விலக்கு அளிப்பது, தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கத்தை முறைப்படுத்துவது, ரோடு விபத்துக்கு அரசுபஸ் டிரைவரை பொறுப்பாக்கி தண்டிப்பதை நிறுத்துவது, தொழில்நுட்பப்பணியாளர்கள், அலுவலக பணியாளர்களை உடனே நியமிப்பது, 240 நாட்கள் பணி முடித்தவர்களை நிரந்தரப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.