/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கூட்டுறவு நூற்பாலை சீர்கேட்டை கண்டித்து சட்டசபை முன் ஊழியர் தீக்குளிக்க முயற்சிகூட்டுறவு நூற்பாலை சீர்கேட்டை கண்டித்து சட்டசபை முன் ஊழியர் தீக்குளிக்க முயற்சி
கூட்டுறவு நூற்பாலை சீர்கேட்டை கண்டித்து சட்டசபை முன் ஊழியர் தீக்குளிக்க முயற்சி
கூட்டுறவு நூற்பாலை சீர்கேட்டை கண்டித்து சட்டசபை முன் ஊழியர் தீக்குளிக்க முயற்சி
கூட்டுறவு நூற்பாலை சீர்கேட்டை கண்டித்து சட்டசபை முன் ஊழியர் தீக்குளிக்க முயற்சி
ADDED : செப் 26, 2011 10:57 PM
புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் ஸ்பின்கோ மில் ஊழியர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெட்டப்பாக்கம் கோடிசாமி நகரை சேர்ந்த பாலாஜி, 45, திருபுவனையில் உள்ள ஸ்பின்கோ மில்லில் பணி புரிந்து வருகிறார். இவர் நேற்று காலை 11 மணிக்கு சட்டசபை எதிரில் வந்தார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணை பாட்டிலை திறந்து, உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.இதை பார்த்த சட்டசபை காவலர்கள் ஓடிவந்து அவர் மீது தண்ணீரை ஊற்றி, காப்பாற்றி, பின்னர் அவரை பெரியக்கடை போலீசில் ஒப்படைத்தனர்.
தீக்குளிக்க முயன்றது குறித்து பாலாஜி கூறுகையில் ' நான் கடந்த 23 ஆண்டுகளாக ஸ்பின்கோ மில்லில் வேலை செய்து வருகிறேன். ஆனால் அங்கு குறைந்த சம்பளம் வழங்குகின்றனர். முன்பு, மாதத்திற்கு 24 நாட்கள் வரை வேலை தருவார்கள். தற்போது நான்கைந்து நாட்கள் தான் வேலை தருகிறார்கள். மேலும், முன்பு 7ம் தேதியே சம்பளம் தருவார்கள். தற்போது 26ம் தேதி வரை தருகிறார்கள். நிர்வாக குறைபாடுகளை கண்டித்து தீக்குளிக்க முயன்றேன் என கூறினார். அவர் மீது பெரியகடை போலீசார் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.