/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/வரதட்சணை கொடுமை; மாமியார், நாத்தனார் கைதுவரதட்சணை கொடுமை; மாமியார், நாத்தனார் கைது
வரதட்சணை கொடுமை; மாமியார், நாத்தனார் கைது
வரதட்சணை கொடுமை; மாமியார், நாத்தனார் கைது
வரதட்சணை கொடுமை; மாமியார், நாத்தனார் கைது
ADDED : செப் 21, 2011 11:12 PM
சிவகங்கை : சிவகங்கை அருகேயுள்ள கோவானூரில் வரதட்சணை கொடுமை செய்ததாக மாமியார், நாத்தனாரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.சிவகங்கை அருகே கோவானூரை சேர்ந்தவர் ஜெயமாலதி,30.
இவருக்கும், செம்பனூரை சேர்ந்த சீனிவாசன் மகன் மருதுபாண்டி,35,க்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது,ஜெயமாலதி 18 பவுன் நகை கொண்டு வந்தார். இதில், 10 பவுன் நகையை தனது தங்கை பத்மராணி திருமணத்திற்காக மருதுபாண்டி வாங்கியுள்ளார். எஞ்சிய எட்டு பவுன் நகையை வெளிநாடு செல்ல தேவை எனக்கூறி வைத்து கொண்டார். மனைவியிடம் நகைகளை திரும்ப தரவில்லை. இதை கேட்ட ஜெயமாலதியை, கணவர், மாமியார் ஆபத்துகாத்தாள், நாத்தனார் பத்மராணி ஆகியோர் கூடுதலாக வரதட்சணை கேட்டு மிரட்டியுள்ளனர். இது குறித்து, ஜெயமாலதி சிவகங்கை மகளிர் ஸ்டேஷனில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் குமாரி, விஜயலட்சுமி எஸ்.ஐ., ஆகியோர், வழக்கு பதிந்து, மாமியார், நாத்தனாரை கைது செய்து, கணவரை தேடி வருகின்றனர்.