/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/பிணமாக வழங்கப்பட்டவர் பிழைத்தெழுந்தார்: மறுக்கும் தனியார் மருத்துவமனை நிர்வாகம்பிணமாக வழங்கப்பட்டவர் பிழைத்தெழுந்தார்: மறுக்கும் தனியார் மருத்துவமனை நிர்வாகம்
பிணமாக வழங்கப்பட்டவர் பிழைத்தெழுந்தார்: மறுக்கும் தனியார் மருத்துவமனை நிர்வாகம்
பிணமாக வழங்கப்பட்டவர் பிழைத்தெழுந்தார்: மறுக்கும் தனியார் மருத்துவமனை நிர்வாகம்
பிணமாக வழங்கப்பட்டவர் பிழைத்தெழுந்தார்: மறுக்கும் தனியார் மருத்துவமனை நிர்வாகம்

திருச்சி : திருச்சி, தனியார் மருத்துவமனையில் இறந்து விட்டதாக கூறி, பிணமாக மூடை கட்டி கொடுக்கப்பட்டவர், உயிர் பிழைத்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் தன்னேரி, 64.
இதற்கிடையே, மருத்துவமனையில் இருந்து மோகன்தாஸ், ஆம்புலன்சில் ஏற்றப்பட்டார். திடீரென அவரது கை, கால்கள் அசையவே, அதிர்ச்சியடைந்த உறவினர்கள், மீண்டும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், நேரடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மோகன்தாசின் அண்ணி சாந்தி கூறியதாவது:திருச்சி அரசு மருத்துவமனைக்குதான், மோகன்தாசை முதலில் கொண்டு சென்றோம். அதற்குள் இரண்டு முறை, மோகன்தாசுக்கு வலிப்பு வந்து, காதில் ரத்தமும் வந்தது.டாக்டர்கள் எங்களுக்கு சரியாக பதில் அளிக்காததால், பயந்துபோன நாங்கள், உடனடியாக திருச்சி கே.எம்.சி., மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு அவரை ஐ.சி.யூ., வார்டுக்கு கொண்டு சென்றனர். நேற்று முன்தினம் வரை தொடர்ந்து சிகிச்சை அளிப்பதாக கூறி, மருந்து, மாத்திரைகளை வாங்கி வர கூறினர்.ஒரு லட்ச ரூபாய் செலவழித்த பின்னும், அவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பதை தெரிவிக்கவில்லை. நாங்கள் வற்புறுத்தவே, நேற்று முன்தினம் இரவு, பிணமாக எங்களிடம் வழங்கினர். அவர் இறந்து விட்டதாக சான்றிதழும் கொடுத்தனர்.
ஆம்புலன்சில் ஏற்றியபோது தான், மோகன்தாசுக்கு உயிர் இருப்பது தெரிந்தது. இதற்குபிறகும் அந்த மருத்துவமனையில் இருக்கக்கூடாது என்று திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துவிட்டோம்.இங்கு வந்தவுடன் தனியார் மருத்துவமனையை சேர்ந்த சிலர், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தாளில் கையெழுத்து கேட்டு, எங்களை மிரட்டுகின்றனர். நாங்கள் போட மறுத்துவிட்டோம். இதுபோன்று பணம் பறிக்கும் மருத்துவமனைகள் மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு சாந்தி கூறினார்.
இதுகுறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் கூறியதாவது: உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட மோகன்தாஸ், ஐ.சி.யூ.,வில் வெண்டிலேட்டர் உதவியுடன் வைக்கப்பட்டிருந்தார். மூன்று நாட்கள் அப்படியே சிகிச்சை பெற்றதால், 'இறந்த பிணத்தை வைத்து சிகிச்சை கொடுக்கிறீர்கள். நாங்கள் வெளியிடத்தில் சிசிச்சை செய்கிறோம்' என, அவரது உறவினர்கள் தகராறு செய்தனர். அதனால், மருத்துவ ஆலோசனைக்கு எதிராக, 'அகைன்ஸ்ட் மெடிக்கல் அட்வைஸ்' என, மோகன்தாஸ் தந்தை தன்னேரி, அண்ணன் செவ்வந்தி செல்வனிடம் கையெழுத்து வாங்கி, உயிருடன் தான் கொடுத்தோம்.தற்போது, திருச்சி அரசு மருத்துவமனையில், அதே வெண்டிலேட்டர் உதவியுடன் தான் மோகன்தாஸ், உயிரோடு இருக்கிறார். எங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் அவதூறு பரப்புகின்றனர்.இவ்வாறு நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டது.


