Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/நாட்டில் ஒவ்வொருவருக்கும் கடமை இருக்கிறதுமார்த்தாண்டத்தில் ஐகோர்ட் நீதிபதி அட்வைஸ்

நாட்டில் ஒவ்வொருவருக்கும் கடமை இருக்கிறதுமார்த்தாண்டத்தில் ஐகோர்ட் நீதிபதி அட்வைஸ்

நாட்டில் ஒவ்வொருவருக்கும் கடமை இருக்கிறதுமார்த்தாண்டத்தில் ஐகோர்ட் நீதிபதி அட்வைஸ்

நாட்டில் ஒவ்வொருவருக்கும் கடமை இருக்கிறதுமார்த்தாண்டத்தில் ஐகோர்ட் நீதிபதி அட்வைஸ்

ADDED : செப் 18, 2011 01:05 AM


Google News
மார்த்தாண்டம்:ஒவ்வொருவருக்கும் கடமை இருக்கிறது என்று கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் மார்த்தாண்டத்தில் நடந்த விழாவில் சென்னை ஐகோர்ட் நீதிபதி அக்பர்அலி பேசினார்.கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு கல்விக்குழு சார்பில் கடந்த கல்வியாண்டில் அதிக மார்க் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு மற்றும் ஏழை மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா மார்த்தாண்டம் ஸ்டேன்டேர்டு ஆடிட்டோரியத்தில் நடந்தது.விழாவிற்கு மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு கல்வி கமிட்டி கன்வீனர் ஷாஜஹான் தலைமை வகித்தார். மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு தலைவர் ஜி.எம்.ஷா முன்னிலை வகித்தார். மார்த்தாண்டம் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகி அப்துல் றஷீது கிறாஅத் ஓதினார். மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு கல்வி கமிட்டி செயலாளர் எம்.ஏ.கான் வரவேற்றார்.சென்னை ஐகோர்ட் நீதிபதி அக்பர்அலி மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் உதவித்தொகை வழங்கி பேசியதாவது:குமரி மாவட்டம் கல்வியில் முன்னிலையில் உள்ளது. மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது உயர்ந்த நிலையில் உள்ளது. ஞானம் என்பதே கல்வி தான். எத்தனையோ பதவி இருக்கிறது.

தானாக வந்து விடாது. எத்தனையோ பேர் குடும்பத்திற்காக தியாகம் செய்து வெளிநாடு செல்கிறார்கள்.இஸ்லாமிய குழந்தைகள் 98 சதவீதத்தினர் எல்.கே.ஜி., செல்கிறார்கள். ஆனால் பிளஸ் 2 முடித்து உயர் கல்விக்கு இரண்டு சதவீத இஸ்லாமியர் மட்டுமே செல்கிறார்கள். இஸ்லாமிய பெண்கள் ஒரு சதவீதம் மட்டும் செல்கிறார்கள். சமுதாயம், கல்வி, அறிவில் உயர்வதற்கு பதிலாக பொருளை தேடுகிறார்கள். இதனால் நம்மை நாமே கேள்வி கேட்க வேண்டும்.பாரத நாடு பழம்பெரும் நாடு. இந்த நாட்டின் வளர்ச்சிக்கு ஏதாவது செய்வது கடமை. மட்டும் இல்லாமல் உரிமையும் கூட. இதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் கடமை இருக்கிறது. சிறிய உதவிகள் மட்டும் செய்து விட்டால் முன்னேறி விட்டோம் என்று நினைக்க கூடாது.மாணவர்கள் திறமையை வளர்த்துக்கொள்ள புத்தகம் படிக்க வேண்டும். படிப்பதற்கும் அன்பு வேண்டும். புத்தகம் மீது ஆர்வம் வேண்டும். கண்களையும், காதுகளையும் திறந்து வையுங்கள். எந்த விஷயம் உள்ளே செல்கிறது என்று கவனியுங்கள். தேவையற்றது செல்வதற்காக திரை என்ற பில்டர் வையுங்கள்.சமுதாயத்தையும், தேசத்தையும் உயர்த்தி செல்வது பெற்றோர் மற்றும் மாணவர்கள் கையில் உள்ளது. இது உங்களால் முடியும். சின்ன விஷயங்களால் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஊக்குவித்தால் சிறிது சிறிதாக மாற்றத்தை கொண்டு வரமுடியும். அதிக செல்லமும், அதிக கண்டிப்பும் பாதிப்பை ஏற்படுத்தும்.இவ்வாறு சென்னை ஐகோர்ட் நீதிபதி அக்பர்அலி பேசினார்.நிகழ்ச்சியில் தக்கலை என்.ஐ., பல்கலை வேந்தர் மஜீத்கான், கல்வி கமிட்டி உறுப்பினர் ஹமீது, ஆலோசனை குழு உறுப்பினர் முகமது எக்கீம், சட்டக்குழு உறுப்பினர்கள் அகமத்கான், அசீம், உதுமான்மைதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கல்வி கமிட்டி பொருளாளர் அப்துல் லத்தீப் நன்றி கூறினார்.

குமரி மாவட்டத்தில் உள்ள 50 முஸ்லிம் ஜமாஅத்களிலும் அதிக மார்க் பெற்ற எஸ்.எஸ்.எல்.சி., - மெட்ரிக்., - பிளஸ் 2 வகுப்புகளை சேர்ந்த 150 இஸ்லாமிய மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us