/உள்ளூர் செய்திகள்/திருச்சி/திருச்சியை 2வது தலைநகராக்கணும் மாஜி அரசு ஊழியர் சங்கம் தீர்மானம்திருச்சியை 2வது தலைநகராக்கணும் மாஜி அரசு ஊழியர் சங்கம் தீர்மானம்
திருச்சியை 2வது தலைநகராக்கணும் மாஜி அரசு ஊழியர் சங்கம் தீர்மானம்
திருச்சியை 2வது தலைநகராக்கணும் மாஜி அரசு ஊழியர் சங்கம் தீர்மானம்
திருச்சியை 2வது தலைநகராக்கணும் மாஜி அரசு ஊழியர் சங்கம் தீர்மானம்
ADDED : ஆக 19, 2011 11:06 PM
திருச்சி: 'திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும்'
என தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் ஆகஸ்ட் மாத கூட்டம் பிஷப்
ஹீபர் பள்ளியில் நடந்தது. மாவட்டத் தலைவர் அருள்ஜோஸ் தலைமை வகித்தார்.
செயலாளர் ஆர்தர் காட்வின், பொருளாளர் ஜெயராஜ், வட்டத்தலைவர்கள்
பாலகிருஷ்ணன், துரைராஜ் ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர். 'திருச்சி அரசு
மருத்துவமனையில் 100 கோடி மதிப்பில் 'ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனை அமைக்க,
தமிழக அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு நன்றி.
தமிழகத்தின் மத்திய பகுதியில் பல்வேறு வசதிகளுடன் விளங்கும் திருச்சி
மாநகரை, தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் வாய்மொழிவை செயல்படுத்தி,
தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும். பஸ்களின் பக்கவாட்டு
கண்ணாடிகளில் உள்ள விளம்பரங்களை அகற்ற வேண்டும். மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்
ரயில் மீண்டும் திருச்சியிலிருந்து புறப்பட வேண்டும்' என்பன உள்பட பல்வேறு
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைத்தலைவர் துரை நன்றி கூறினார்.


