Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ கட்டிப்பிடிக்க பணம் தரும் சீன பெண்கள்

கட்டிப்பிடிக்க பணம் தரும் சீன பெண்கள்

கட்டிப்பிடிக்க பணம் தரும் சீன பெண்கள்

கட்டிப்பிடிக்க பணம் தரும் சீன பெண்கள்

ADDED : ஜூன் 09, 2025 06:18 AM


Google News
Latest Tamil News
பீஜிங்: நம் அண்டை நாடான சீனாவில், இளம் பெண்கள் பலர் மன அழுத்தம், படிப்பு அல்லது வேலை குறித்த பயம், உடல் தோற்றம் குறித்த கவலைகளுடன் உள்ளனர்.

இவர்களில் பலர் மேன் மம்ஸ் எனப்படும், ஆண் தாய்களிடம் இருந்து ஐந்து நிமிட கட்டிப்பிடி சேவையை பெறுகின்றனர்.

இதற்காக 250 முதல் 600 ரூபாய் வரை கட்டணமாக தருகின்றனர்.

இந்தக் கட்டிப்பிடி சேவை சமூக வலைதளங்கள் வாயிலாக ஏற்பாடு செய்யப்படுகிறது. பொது இடங்களான மெட்ரோ நிலையங்கள், வணிக வளாகங்கள் போன்றவற்றில் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்கும் ஆண்களை அவர்களின் பொறுமை, உடல் அமைப்பு, மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் பெண்கள் தேர்வு செய்கின்றனர்.

இதில் ஜோ எனும் இளைஞர், 34 முறை கட்டிப்பிடி சேவை வழங்கி, அதற்கு 21,000 ரூபாய் கட்டணமாக வசூலித்ததாக கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us