மரண தண்டனை பிடியில் ஈரான் பாடகர்
மரண தண்டனை பிடியில் ஈரான் பாடகர்
மரண தண்டனை பிடியில் ஈரான் பாடகர்
ADDED : ஜூன் 09, 2025 04:48 AM

தெஹ்ரான்: மேற்காசிய நாடான ஈரானின் பிரபல ராப் இசை பாடகர் அமீர் ஹொசைன் மக்சூத்லுா, 37. முகம் முழுதும் பச்சை குத்தியதால் டாட்டலுா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்.
கடந்த, 2022ல் சரியாக ஹிஜாப் அணியாததற்காக மஹ்ஸா அமினி என்ற இளம்பெண் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அரசை விமர்சிக்கும் பாடல்களை இவர் இயற்றினார்.
இந்நிலையில், இஸ்லாமிய புனிதங்களை அவமதித்த குற்றச்சாட்டில் அவருக்கு ஈரான் நீதிமன்றம் விதித்த துாக்கு தண்டனை நேற்று உறுதியானது.