ராஜலட்சுமி கல்லூரியில் கல்வி குறித்த கருத்தரங்கம்
ராஜலட்சுமி கல்லூரியில் கல்வி குறித்த கருத்தரங்கம்
ராஜலட்சுமி கல்லூரியில் கல்வி குறித்த கருத்தரங்கம்
ADDED : ஆக 16, 2011 06:15 PM

சென்னை: பூந்தமல்லியை அடுத்த, தண்டலம் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில், இரண்டாவது சர்வதேச கல்வி கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது.
கல்லூரி தலைவர் தங்கம் மேகநாதன் வரவேற்றார். சென்னைக்கான அமெரிக்க தூதர் ஜெனிபர் மெக்கின்டைர், கருத்தரங்கை துவக்கிவைத்து பேசியதாவது: இந்திய மக்கள் தொகையில், 50 கோடி பேர், 25 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். இவர்களுக்கு கல்வி தருவது என்பது சவாலான விஷயம். இதை, இந்தியா மட்டுமே எதிர்கொள்ள தேவையில்லை. இதுபோன்ற கருத்தரங்குகள் மூலம், உலக நாடுகள், இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளன. மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புகள் பற்றி தெரிந்துகொள்ள, கருத்தரங்கம் வசதியாக இருக்கும். அமெரிக்கா பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், 1 லட்சம் இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து, வரும் அக்., 13ம் தேதி, உயர்கல்வி மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளன. அமெரிக்க மாணவர்கள், இந்தியாவில் கல்வி பயில ஊக்குவிக்கும் வகையில், ''பாஸ்போர்ட் ஆப் இந்தியா'' என்ற திட்டத்தை அமெரிக்கா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து, வரும் செப்டம்பரில் மகளிர் அறிவியல் பயிலரங்கத்தை நடத்தவுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
கல்லூரி முதல்வர் ரங்கநாராயணன் நன்றி கூறினார். பல கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.