/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பாலத்துக்கு கீழ் தேங்கும் தண்ணீரால் அவதிபாலத்துக்கு கீழ் தேங்கும் தண்ணீரால் அவதி
பாலத்துக்கு கீழ் தேங்கும் தண்ணீரால் அவதி
பாலத்துக்கு கீழ் தேங்கும் தண்ணீரால் அவதி
பாலத்துக்கு கீழ் தேங்கும் தண்ணீரால் அவதி
ADDED : ஜூலை 25, 2011 09:15 PM
திருப்பூர் : ஒவ்வொரு முறை மழை பெய்யும்போதும், திருப்பூர் பாளையக்காடு - கோல் டன் நகர் செல்லும் ரோட்டில் உள்ள ரயில்வே பாலத்துக்கு கீழே குளம்போல் தேங்கும் மழை நீரால் வாகன ஓட்டிகளும், மாணவ மாணவியரும் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். திருப்பூர் மாநகராட்சி 13வது வார்டுக்கு உட்பட்டது கோல்டன் நகர். 39வது வார்டுக்கு உட்பட்டது மாரியம்மன் கோவில் வீதி. இவ்விரண்டு வார்டுக்கும் இடைப்பட்ட சக்தி மாரியம்மன் கோவில் அருகே ரயில்வே பாலம் உள்ளது. ஊத்துக்குளி ரோட்டில் இருந்து தொட்டிய மண்ணரை, சஞ்சய் நகர், கருணாகராபுரி, ஜெயலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவும், மற்ற பகுதிகளில் இருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு வரவும், இவ்வழித்தடம் உள்ளது. இவ்வழியாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் சென்று வருகின்றனர். இப்பகுதியில் அடிக்கடி சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் மாரியம்மன் கோவில் வீதி எதிரே உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது என மக்கள் போராட்டம் நடத்தினர், அதன் பின், பாலத்தின் கீழ் மூன்றடி ஆழத்துக்கு சாக்கடை கால்வாய் மட்டுமே கட்டப்பட்டது. இருப்பி னும், மழை பெய்தால், ஆறடிக்கு தண்ணீர் ரயில்வே பாலத்தின் கீழ் தேங்குகிறது. தடுப்பது யார்? 13வது வார்டு கவுன்சிலர் கோவிந்தராஜூவிடம் கேட்ட போது, ''மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தி விட்டேன். யாரும் கண்டுகொள் வதில்லை. இந்த இடத்தில் ரோடு போடுவதற்கு ஓராண்டுக்கு முன்பு நிதி ஒதுக்கி, ஒப்பந்ததாரரிடம் பணியும் ஒப்படைக்கப்பட்டு விட்டது. ஆனால், அவர் பணியை துவக்கவில்லை; மாநகராட்சியும் கண்டுகொள்வது இல்லை. பணியை துவங்க விடாமல், ஒரு சக்தி தடுக்கிறது,'' என்றார். ரோடு போட்டால் மட்டும் தீர்வாகாது: 39வது வார்டு கவுன்சிலர் கலாமணியை தொடர்பு கொண்ட போது, அவரது கணவர் நடராஜன் பேசினார். அவர், ''ரோடு போட்டால் மட்டும் கழிவுநீர், மழைநீர் தேங்கும் பிரச்னை தீராது. ஊத்துக்குளி ரோட்டில் இருந்து 21 அடி, கோல்டன் நகரில் இருந்து 17 அடிக்கு ரயில்வே பாலம் பள்ளமாக உள்ளது. பாலத்துக்கு கீழ் இரண்டு அடிக்கு சாலை அமைத்தால் தான், அதற்கேற்ற மட்டம் வகுத்து ரோடு போட முடியும். ரயில்வே பாலத்தின் கீழ் ரோடு போட, ரயில்வே அதிகாரிகளிடம் மாநகராட்சி நிர்வாகம் அனுமதி பெற வேண்டும்,'' என்றார்.