மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்
மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்
மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்
ADDED : செப் 04, 2011 01:58 AM
சிதம்பரம்:சிதம்பரம் பள்ளிகளில் நவீன பாரத நலச்சங்கம் சார்பில் புவி
வெப்பநிலை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.காமராஜ்,
வீனஸ், நிர்மலா மெட்ரிக் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் முன்னிலையில்
விழிப்புணர்வு முகாம் நடந்தது. டக்டர் முருகன், பாலசந்தர், மேனன்,
குருமூர்த்தி உள்ளிட்ட விழிப்புணர்வு கூட்டங்களில் பங்கேற்றனர். சங்கச்
செயலர் லீனாமேனன் கருத்துக்களைத் தெரிவித்தார். முகாமில் புவி எவ்வாறு
வெப்பமாகிறது. அதனை எவ்வாறு குறைப்பது.
பிளாஸ்டிக் மற்றும் நாம் உபயோகப் படுத்திய கழிவுப் பொருட்களை மறு சுழற்சி
முறைக்காக ஜெம்ஸ் என்ற தொழிற்சாலை மாதம் ஒரு முறை சேகரித்துச் செல்வதைப்
பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது.ஒவ்வொரு பள்ளியிலும் மறு சுழற்சி தொட்டி
வைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்நிகழ்ச்சியை பிற மாநிலங்கள், பிற
மாவட்டங்களில் நடத்த சங்கம் முடிவு செய்துள்ளது.