'அப்ப ஒரு பேச்சு, இப்ப ஒரு பேச்சு': தி.மு.க., மீது பாலகிருஷ்ணன் கொதிப்பு
'அப்ப ஒரு பேச்சு, இப்ப ஒரு பேச்சு': தி.மு.க., மீது பாலகிருஷ்ணன் கொதிப்பு
'அப்ப ஒரு பேச்சு, இப்ப ஒரு பேச்சு': தி.மு.க., மீது பாலகிருஷ்ணன் கொதிப்பு
ADDED : மே 22, 2025 05:33 AM

நாகப்பட்டினம்: மா.கம்யூ., முன்னாள் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி:
தமிழகத்தில் உள்ளாட்சிகளின் பதவிக்காலம், கடந்த ஜன., 5ம் தேதியோடு முடிவடைந்து விட்டது. பதவிகள் முடிவற்ற 28 மாவட்டங்களிலும், உடன் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். பதவிக்காலம் முடிவடைந்தால், 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும். கடந்த 2017 -- 2018ல், அ.தி.மு.க., உள்ளாட்சி தேர்தலை தள்ளிப் போட்டது. புதிய மாவட்டங்கள் பிரிப்பு, தொகுதி வரையறை என அ.தி.மு.க., காரணம் கூறியது.
இதை எதிர்த்து, தி.மு.க., வழக்கு தொடர்ந்தது. 9 மாவட்டங்களுக்கு மட்டும் பின்னால் தேர்தல் நடத்தலாம்; மீதமுள்ள 28 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 28 மாவட்டங்களில் இருக்கும் உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தவில்லை. நகராட்சி, மாநகராட்சி வார்டு வரைமுறை நடக்கிறது என, தேர்தலை நடத்தாமைக்கு தி.மு.க., காரணம் கூறுகிறது.
சட்டசபை தேர்தலுக்குப் பின்தான் உள்ளாட்சிக்கு தேர்தல் நடக்கும் நிலை உள்ளது. உள்ளாட்சி தேர்தல் தாமதத்தால், நிர்வாகத்தில் 50 சதவீதம் பெண்களுக்கு பதவி கிடைக்க வாய்ப்பில்லாமல் போகும். உள்ளாட்சியில் அதிகாரிகள் நிர்வாகத்தில், அடித்தட்டு மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும். ஊழலுக்கு தான் வழி வகுக்கும். இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.