/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லை மாநகர மேயர் தேர்தல் அதிமுக., திமுக., "அவுட்' காங்.,கிற்கு அடிக்குது "லக்'நெல்லை மாநகர மேயர் தேர்தல் அதிமுக., திமுக., "அவுட்' காங்.,கிற்கு அடிக்குது "லக்'
நெல்லை மாநகர மேயர் தேர்தல் அதிமுக., திமுக., "அவுட்' காங்.,கிற்கு அடிக்குது "லக்'
நெல்லை மாநகர மேயர் தேர்தல் அதிமுக., திமுக., "அவுட்' காங்.,கிற்கு அடிக்குது "லக்'
நெல்லை மாநகர மேயர் தேர்தல் அதிமுக., திமுக., "அவுட்' காங்.,கிற்கு அடிக்குது "லக்'
திருநெல்வேலி : நெல்லை மாநகராட்சியை கடந்த 15 ஆண்டுகளாக நிர்வகித்த திமுக, அதிமுக எந்த வளர்ச்சி பணியையும் மேற்கொள்ளாததால் விரக்தி அடைந்த மக்கள் காங்., வேட்பாளர் ஜூலியட் பிரேமலதாவை மேயராக்க திட்டமிட்டுள்ளதாக காங்., மாநகர மாவட்ட தலைவர் சுந்தரராஜபெருமாள் தெரிவித்தார்.
நெல்லை மாநகர் மாவட்ட காங்., தலைவர் சுந்தரராஜ பெருமாள் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது; நெல்லை மாநகராட்சி தேர்தலில் காங்.,தனித்து போட்டியிட்டது இல்லை.
நில அபகரிப்பு வழக்கால் திமுகவிற்கும், பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தால் அதிமுகவிற்கும் மக்கள் செல்வாக்கு சரிந்துள்ளதை காண முடிகிறது. அதுபோல் பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு எதிர்கட்சியான தேமுதிக சட்டசபையில் எதிர்ப்பு தெரிவிக்காததால் அக்கட்சியின் செல்வாக்கும் சரிந்துள்ளது. 150 ஆண்டுகள் பாரம்பரிய கொண்ட காங்.,கட்சிக்கு நெல்லை மாநகரில் தனி ஓட்டு வங்கி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக நெல்லை பார்லி., தொகுதியை காங்., தக்க வைத்துள்ளது. அதுபோல் நெல்லை மாநகர மேயர் பதவியை காங்., கட்சி முதன்முறையாக பிடிக்கும்.
நெல்லை மாநகராட்சியை 2 முறை திமுகவும், ஒரு முறை அதிமுகவும் கைப்பற்றியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் மாநகரின் வளர்ச்சிக்காக 2 திராவிட கட்சிகளும் எந்த வளர்ச்சி திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. மாறாக மாநகரின் அனைத்து பகுதிகளிலும் குப்பை குவியலாக காணப்படுவதால் சுகாதாரமற்ற நிலை காணப்படுகிறது. மேலும் மாநகர மக்களின் குடிநீர் தாகத்தை தணிக்க நிரந்தர தீர்வு காணப்படவில்லை. தரமான சாலை வசதி, மின் விளக்கு வசதி உட்பட எந்த வித அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற முன்வரவில்லை. இதனால் மக்கள் இந்த தேர்தலில் அதிமுக., திமுகவிற்கு மாற்றாக நேர்மையான, தூய்மையான, எளிமையான காங்.,கிற்கு வாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளது தேர்தல் பிரசாரத்தின் மூலம் தெரிய வருகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் பண பலம் மக்களிடையே எடுபடவில்லை. அதுபோல் உள்ளாட்சி தேர்தலில் வார்டில் போட்டியிடக்கூடிய வேட்பாளரின் பலம், கட்சி சின்னம் போன்றவையே வெற்றியை தீர்மானிக்கும். இதனால் மற்ற கட்சிகளை விட காங்.,கிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்த தேர்தலில் பெறும் வெற்றியின் மூலம் காங்.,கட்சியின் தனிப்பட்ட செல்வாக்கு தெரிய வரும்.
உள்ளாட்சி தேர்தலில் காங்.,வேட்பாளர் மேயரானால் நெல்லை மாநகரை பசுமை நகரமாக மாற்றுவதுற்கான திட்டம் செயல்படுத்தப்படும். நெல்லை மாநகரின் நிலவிவரும் குடிநீர் பிரச்னையை தீர்க்க தாமிரபரணி ஆற்றில் கூடுதல் உறைகிணறுகளை ஏற்படுத்தி சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும். மாநகரில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற இன்ஜினியர்கள் குழுவின் ஆலோசனையின் பேரில், மத்திய அரசிடம் கூடுதல் நிதி பெற்று பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். இதன் மூலம் தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கலப்பதை முற்றிலும் தடுக்கப்படும். மாநகர அழகுபடுத்துவதற்காக 'பசுமை' திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் மாநகரின் ஆங்காங்கே பூங்காக்கள், செயற்கை நீருற்றுகள், சாலையோர பூங்காக்கள் அமைக்கப்படும். வண்ணார்பேட்டை பகுதியில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண ஏற்கனவே வடக்கு- தெற்காக உள்ள மேம்பாலத்தை இணைக்கும் வகையில் கிழக்கு-மேற்காக மற்றொரு பாலம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். இவ்வாறு காங்., மாநகர் மாவட்ட சுந்தரராஜபெருமாள் தெரிவித்தார்.


